நாட்டின் தலைவராக இருந்தவர் உட்பட உரியவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - கார்டினல் மல்கம் ரஞ்சித்



உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பான சகலரையும் கண்டுபிடித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஓராண்டு நினைவை முன்னிட்டு கொழும்பு மேற்ராணி இல்லத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நாட்டின் முப்படைகளின் பிரதானியான நாட்டின் தலைவர் உட்பட சகலரும் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். இஸ்லாத்துக்கும் இதற்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறுமென வெளிநாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த போதும் அது குறித்து கவனம் எடுக்காது செயற்பட்டவர் யாராக இருந்தாலும் நாட்டின் பிரதானியாக இருந்தவர் உட்பட நாட்டின் அடி மட்டத்தில் இருப்பவர் வரை தேடி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் கேட்டுள்ளார்.

அவர்களுடைய தரம் எத்தரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அவர் நேற்று (21) ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்