கொரோனா வைரஸ் காரணமாக எமது நாடு உட்பட முழு உலகும் பாதிக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்திலும், தொலைகாட்சி நிகழ்வுகளினூடாக இனவாதத்தை தூண்டிக்கொண்டிருக்கும் சதுர அல்விஸ் மற்றும் கடைசி மூன்று நோயாளிகளால் தான் இம்முறை புத்தாண்டு கொண்டாட முடியாது போனது என்று கூறிய பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் பொலிஸ் முறைப்பாடொன்றை மின்னஞ்சலூடாக மேற்கொண்டுள்ளது.

மேலும் குறித்த முறைப்பாட்டின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.