கொரோனா தொற்றாளர்களின் அருகில் சென்று சிகிச்சைக்கு உதவி புரியும் ரோபோ ஒன்றை எல்பிட்டிய ஜனாதிபதி வித்தியாலய மாணவரான எஸ்.ஆர்.தெஜன தெவ்மின உருவாக்கியுள்ளார்.

இந்த ரோபோவை பயன்படுத்தி நோயாளிக்கு மருந்தளித்தல், நோயாளியின் இரத்தத்தை பரிசோதித்தல் ஆகிய செயல்களை தூரத்தில் இருந்தவாறே வைத்தியர் ஒருவரால் மேற்கொள்ள முடியும்.

அத்துடன் ரோபோவில் உள்ள ஒலிவாங்கியின் மூலம் நோயாளியுடன் உரையாடவும் முடியும்.

இதேவேளை வெல்லவாய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் கொரோனா நோயாளி ஒருவருக்கு செயற்கை சுவாசமளிக்க கூடிய கருவி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

வீட்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை உபயோகித்து இந்த கருவியை உருவாக்கியுள்ளதாகவும், அது வெற்றிகரமாக செயற்படுவதாகவும் குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இந்த கருவியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் 20 இலட்சத்துக்கும் அதிகமான பணம் செலவாகும் எனவும் ஆனால் 15000 ரூபாவுக்குள் உள்நாட்டில் இதனை தயாரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.