இஸ்ரேல் பிரதமர் முதன்முறையாக ரமழான் வாழ்த்துக்களைத் தெரிவிததுள்ளார்.

பிரதமர் நெதன்யாகு இஸ்ரேலில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்வதாகவும் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செய்து வருவதாகவும் இஸ்ரேலில் சகலரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்ந்து வருவதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதியரசர்கள், முன்னணி டாக்டர்கள், பேராசிரியர்கள் இருப்பதாகக்; கூறும் பிரதமர், இஸ்ரேல் முஸ்லிம்கள் நாட்டு மக்களுடன் ஒருமித்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஒரு தொழுகை அறை இருப்பதாகவும் இஸ்ரேல் மற்றும் உலக முஸ்லிம்களுக்கு ரமழான் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.