வழமை போன்று ரமழான் காலத்தில் முஸ்லிம் சேவையில் ஸஹர் நேர விசேட நிகழ்ச்சிகள்

Rihmy Hakeem
By -
0

புனித ரமழானை முன்னிட்டு இம்முறையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை அதிகாலை 2.30 மணியிலிருந்து 5 மணி வரை விஷேட நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் சனூஸ் முஹம்மட் பெரோஸ் தெரிவித்தார்.

புனித ரமழானை முன்னிட்டு சஹர் விஷேட நிகழ்ச்சிகளாக அதிகாலை 2.30 மணியிலிருந்து இந்த நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர நேன்பு திறப்பதற்கான விஷேட நிகழ்ச்சியும் கலையகத்திலிருந்து ஒலிபரப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

வழமைபோன்று ரமழான் காலத்தில் நடாத்தப்படுகின்ற விஷேட நிகழ்ச்சிகள் பகல் நேரத்தில் ஒலிபரப்பப் பட மாட்டாது என்று தெரிவித்த அவர், காலை 8.00 மணி முதல் 10.30 வரை முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)