செய்திகளை வெளியிடும் போது சம்பந்தப்பட்ட நபரின் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டாம் - அரசாங்க தகவல் திணைக்களம் மீண்டும் ஊடகங்களிடம் வலியுறுத்து

(செய்தியாசிரியர் ரிஹ்மி)

கொவிட் 19 தொடர்பான செய்திகளை வெளியிடும் போது ஊடக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் பற்றி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சென்ற 06.04.2020 அன்று ஊடக நிறுவனங்களுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நேற்றைய தினம் (25) அரசாங்க தகவல் திணைக்களத்தினால், ஏற்கனவே (06) அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதியுடன் மற்றுமொரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் என்னவென்றால், "சில சந்தர்ப்பங்களில் நீங்கள் செய்திகளை வெளியிடும் போது சம்பந்தப்பட்ட நபர்களுடைய அடையாளங்கள், வேலை செய்யும் இடம், தொழில், குடும்ப அங்கத்தவர்களின் விபரம், குடும்பங்களின் அல்லது குழுக்களின் அடையாங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செய்திகளை வெளியிடுவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த கடிதத்தில் உள்ள 03, 04 மற்றும் 05 ஆவது பகுதிகளை கடுமையாக பின்பற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவின் கையொப்பத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 




கருத்துகள்