வாழைத்தோட்டப் பெண்ணுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றுக்கு முஸ்லிம் ஒருவர் தான் காரணம் !

பொய் சோடிக்கும் இனவாத ஊடகத்தின் மற்றுமொரு முகம்

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத்தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு முஸ்லிம் ஒருவரே காரணம் என சோடிக்கும் தகவல்கள் உள்ளடங்கிய செய்தியொன்றை தேசிய இனவாதம் கக்கும் ஊடகமொன்று சோடித்து வெளியிட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குக் காரணம், அப்பெண் இந்தியாவுக்கு மேற்கொண்ட யாத்திரைப் பயணமே  என இதேபோன்ற தேசிய தொலைக்காட்டி செய்தியொன்றில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க நேரடியாகவே தெளிவுபடுத்தியுள்ளார்.

பணிப்பாளரின் கருத்துப் படி, குறித்த பெண் இந்தியாவிலிருந்து கடந்த மே மாதம் 12 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். விமானத்தில் வரும் போது இப்பெண்ணுக்கு அருகிலுள்ள ஆசனத்தில் இருந்த நபர் அடிக்கடி இருமிக் கொண்டிருந்ததாகவும், இதனையடுத்து குறித்த பெண், விமானப்  பணியாளரிடம் இது குறித்து முறையிட்டதன் பின்னர் அவருடைய ஆசனம் மாற்றப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் தகவல் வழங்கியிருந்தார்.

அத்துடன், இவருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று கடந்த 27 ஆம் வெளிப்பட்டுள்ளது. இது 15 நாட்களின் பின்னராகும். சில வேளை இவருக்கு இந்தியாவிலிருந்து திரும்புவதற்குள்ள இறுதிக் கட்டத்தில் இந்த வைரஸ் தொற்று இடம்பெற்றிருக்க வேண்டும். அல்லது விமானத்தில் அருகில் இருந்தவர் மூலம் தொற்றியிருக்க வேண்டும் என்ற இரு கருதுகோள்களையே இப்பெண்ணிக் கொரோனா தொற்றுக்கான காரணமாக பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெளிவாக முன்வைத்திருந்தார்.

இந்த உண்மை நிலை இவ்வாறிருக்க, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இப்பெண்ணின் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டு இந்த அத்தனை உண்மைகளையும் மூடி மறைக்கும் விதத்தில் இந்த இனவாத ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளமையானது அனைவரையும் வருத்தம் கொள்ளச் செய்துள்ளது.

அந்த குரல் பதிவில், ''தாம் இலங்கைக்கு வந்து வீட்டில் தனிமைப்பட்டிருந்ததாகவும், இதன்போது கொரோனா நோய்க்குரிய எந்தவொரு அறிகுறியும் தம்மிடம் வெளிப்பட வில்லையெனவும், அடுத்த வீட்டு முஸ்லிம் ஒருவர் மூலமாகவே இந்த நோய் தனக்குத் தொற்றியிருக்கலாம்'' எனவும் அக்குரல் பதிவில் அப்பெண் தெரிவித்துள்ளார்.

இந்த செய்திக்கு சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவின் கருத்தும் இணைக்கப்படுகின்றது. ஆனால், அவர் இந்த பெண் தொடர்பில் எந்தக் கருத்தையும் இதில் தெரிவிக்கவில்லை. அப்பகுதியில் பலருக்கு ஏற்பட்ட கொரோனா பரவலுக்கு சலூன் உரிமையாளர் ஒருவரும் காரணம் என்பதாகவே வேறு ஒரு தகவலைக் குறிப்பிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளில்லாத நாக்குப் போன்று இந்த இனவாத ஊடகம் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.