ஊரடங்கை தளர்த்தியதால் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு - ஜேர்மன்

Rihmy Hakeem
By -
0

ஜேர்மனியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் வெளியில் சுற்றத் துவங்கினர். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

முகக் கவசம் அணிவது மட்டும் கட்டாயம் எனவும் மக்கள் இதை முழுமையாகப் கடைபிடித்தால், கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்’ என, ஜேர்மனியின் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அங்கு தொடர்ந்து நான்காவது நாளாக புதிதாக தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில் மாத்திரம், 1,478 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

‘முறையான ஆய்வு செய்யாமல் ஊரடங்கை தளர்த்தியதே பாதிப்புகள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. மக்களின் உயிருடன் ஜேர்மன் அரசு விளையாடுவதை நிறுத்த வேண்டும்’ என, பல்வேறு தரப்பினரும் அரசு மீது குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)