(நா.தனுஜா)
கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி நிலைக்கு மத்தியில் கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
அதன்படி கட்டாரிலுள்ள இலங்கையர் குழுமத்துடன் நெருங்கிப் பணியாற்றி வருவதாகத் தூதரகம் அறிவித்திருக்கிறது.
தற்போது சுமார் 120,000 இலங்கையர்கள் கட்டாரில் இருப்பதுடன், அவர்களுடன் சமூகவலைத்தளங்கள் மூலமாகவும், தூதரக இணையத்தளம் மூலமாகவும் தொடர்புகள் பேணப்பட்டு வருகின்றன.
மேலும் கட்டாரிலுள்ள இலங்கையர்கள் தூதரகத்துடன் தொடர்பு கொள்வதற்காக 24 மணிநேரமும் சேவையில் உள்ள 3 தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தொலைபேசி இலக்கங்களின் மூலம் ஏற்படுத்தப்படும் தொடர்புகளுக்குப் பதிலளிப்பதற்கான அதிகாரிகளுக்கு மேலதிகமாக, சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்கென மருத்துவத்துறைசார் நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக