போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தைச் செலுத்த சலுகைக் காலம்



( மினுவாங்கொடை நிருபர் )

   2020 மார்ச் மாதம் 01ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை (Spot Fine), எந்தவித மேலதிக தண்டப்பண அறவீடு்களுமின்றி மே மாதம் 02 ஆம் திகதி வரை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   பொலிஸ் மா அதிபரின் இணக்கப்பாட்டின் கீழ், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

   இதேவேளை, பெப்ரவரி 16 முதல் 29 வரையிலான  காலப் பகுதியில் விதிக்கப்பட்ட தண்டப்பணச் சீட்டானது, உரிய மேலதிக அபராதத்துடன் செலுத்த வேண்டும் எனவும், அதனையும் மே 02 ஆம் திகதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

   குறித்த சலுகைக் காலம், எதிர்வரும் மே 02 ஆம் திகதி வரை மட்டுமே எனவும், அக்காலப் பகுதிக்குள் அதனைச் செலுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

   அத்துடன், தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தொடர்பிலான  சலுகைக் காலமானது, அம்மாவட்டங்களிலுள்ள தபாலகம் மற்றும் உப தபாலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துகள்