சலாகம சாதியினர் உருவான வரலாறும் பேருவளை முஸ்லிம்களும், அரசியலும்.
நாம் அறிந்தோ அறியாமலோ சிங்கள மக்களுக்கு மத்தியில் சாதி (caste ) அமைப்பு இன்றும் பலம் பொறுந்திய ஒன்றாக காணப்படுகிறது. இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளில் "ரணசிங்ஹ பிரேமதாஸவை" தவிர ஜே ஆர் ஜயவர்தன முதல் கோத்தாபய ராஜபகஷவைத் வரையிலான அனைவரும் "கொவிகம" சாதி அமைப்பைச் சேரந்தவர்கள்.
கொவிகம சாதியினர் பொதுவாக இரண்டு வகையாக பிரித்துநோக்கப்படுகிறார்கள். "மலைநாட்டு கொவிகம" என்றும் "கரையோர கொவிகம" என்றும் பொதுவாக அழைக்கப்படுகிறார்கள்.
சிறிமாவோ அம்மையாரின் ரத்வத்த குடும்பம் மலைநாட்டு கொவிகம ரதல்ல குடும்பத்தவர்கள் ஆவர். ரதல்ல குடும்பத்தவர்கள் மன்னரின் பிரதானிகளாக இருந்துள்ளார்கள்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் சாதி முறைமையை அடிப்படையாகக் கொண்டு பல்வோறு சுவையான சம்பங்கள் இடம்பெற்றுள்ளன. "படித்த இலங்கையர்" ஒருவரைத் தெரிவு செய்வதற்காக மக்கலன் அரசியலமைப்புத் திருத்தின் கீழ் இடம்பெற்ற தேர்தலில் தேர்தலில் sir மார்க்கஸ் பெர்ணாண்டோடு, sir பொன். ராமநாதன் ஆகியோர் போட்டியிட்டார்கள்.
Sir மார்க்கஸ் பெர்ணாண்டோ "கராவ" குலத்தைச் சேரந்தவர் என்பதால் "கொவிகம" குலத்தைஞ் சேரந்த
sir மார்க்கஸ் பெர்ணாண்டோவைத் தோற்கடித்து "வெள்ளாளர்" சாதியைச் சேர்ந்த பொன் ராமநாதனை உயர் சாதி சிங்களத் தலைவர்கள் வெற்றிபெறச் செய்தார்கள்.
சலாகம சாதியினரும் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். காலி மாவட்டத்தின் ரத்கம, பூஸ்ஸ, பகுதிகளிலும் களுத்தறை மாவட்டத்தின் பயாகல, வாத்துவ போன்ற பகுதிகளிலும் "சலாகம" அல்லது "ஹலாகம" சாதியினர் கூடுதலாக வசித்து வருகின்றனர்.
கி.பி 13ம் மற்றும் 14ம் நூற்றாண்டுகளில் பேருவளைப் பிரதேசத்தை வத்ஹிமி புவனேகபாகு என்ற அரசன் ஆட்சி செய்தான். பேருவளைப் பகுதியை "வத்ஹிமி" என்ற பெயரில் பல மன்னர்கள் ஆட்சிசெய்துள்ளனர். அதனால் தான் வத்ஹிமிராஜபுர என்ற பகுதி இன்றும் காணப்படுகிறது.
வத்ஹிமி புவனேகபாகு தனது முடிசூட்டும் சமயச் சடங்கு நிகழ்வை நடத்துவதற்காக இந்தியாவைச் சேர்ந்த "பிராமனர்களை" அழைத்துவருமாறு பேருவளையைச் சேர்ந்த "பெரிய முதலிமரைக்கார்" என்பவருக்கு உத்தரவிட்டா்.
பெரிய முதலிமரைக்கார் கப்பல் ஓட்டுவதில் பிரபலமானவராக இருந்தார். பெரிய முதலி மரிக்கார் இவர்களை இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து அழைத்து வந்தார். நம்பூதிரி என்றழைக்கப்படும் இவர்கள் மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள் ஆவர். இந்த பிரமாணர்கள் பேருவளைத் துறைமுகத்திலிருந்து வத்ஹிமி புவனேகபாகுவின் உத்தரவின் பேரில் வெண்கலத்தினால் ஆன பல்லக்கில் ஏற்றப்பட்டு அரசமாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
சலாகம சமூகத்தின் மற்றுமொரு வரலாறு இவ்வாறு கூறுகிறது. "பேருவளை வத்ஹிமி புவனேகபாகு மன்னனுக்கு தங்கத்தினாலான ஆடையை அணிவதற்காக "நூல் பின்னுவோரை" அழைத்துவருவதற்கான அவசியம் ஏற்பட்டது. அதற்கான பொறுப்பு பேருவளை பெரியமுதலி மரைக்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேரளாவின் மலபார் துறைமுகத்தில் வசிக்கும் "சாலியர்" எனப்படும் சாதியைச் சேர்ந்தவர்களை பெரிய முதலி மரைக்கார் என்ற பேருவளை முஸ்லிம் அழைத்துவந்தார். கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் நெசவுத் தொழில் செய்து வரும் இந்த சாதியினர் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் "பிற்படுத்தப்பட்டோர்" பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சாலியார் என்ற பெயரில் இலங்கை வந்தர்களே "சலாகம" என்ற சிங்கள சாதியாக மாற்றம்பெற்றுள்ளார்கள்.
சூதாடுவதற்காக கப்பலுக்கு அவர்கள் அழைத்துவரப்பட்டு பின்னர அவர்களை அறியாமல் இலங்கைக்கு இவர்கள் அழைத்து வரப்பட்டதாக வாய்மொழி மூலமான வரலாறுகளும் உண்டு.
"சலாகம" சாதியினர் பிரமாணர்கள் என்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் இரண்டு விதமான வரலாறுகள் உண்டு.
இன்று இவர்கள் கறுவா உற்பத்தித் துறையிலும் உயர் அரச பதவிகளிலும் உள்ளார்கள்.
முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன "சலாகம" சாதியைச் சேர்ந்தவராவர். அவருக்கு சலாகம குலத்தினரின் உயர்ந்தபட்ச ஆதரவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆய்வு: பஸ்ஹான் நவாஸ்
இலங்கையின் சாதி அமைப்பின் அரசியல் வரலாறு பற்றி மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் எழுதிய
ශ්රී ලංකාවේ නූතන කැරලිකරුවන්ගේ සමාජ පසුබිම என்ற புத்தகத்தைப் பரிந்துரை செய்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக