(அப்ரா அன்ஸார்)

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் நிலையில் களுத்துறை மாவட்ட மக்கள் தமது சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வசதியாக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் களுத்துறை பெரிய ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைகளுக்காக சென்று அசௌகரியங்களை எதிர்கொள்வதை தவிர்க்கும் வகையில் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவ ஆலோசனை மற்றும் தமக்கான சிகிச்சை தினங்களை உறுதிப்படுத்திக் கொள்ளல் மற்றும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக இந்த இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி ஆஸ்பத்திரியின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் என்.கே.சி.குணரட்ண தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க சத்திர சிகிச்சை தொடர்பில் தொடர்புகொள்ள 0762531778, வெளிநோயாளர் பகுதி சிறுவர் நோய் கிளினிக், புற்று நோய் தொடர்பான கிளினிக் சிறுநீரக நோய் தொடர்பான கிளினிக் 0762532214, கண் நோய் தொடர்பான கிளினிக் 0762363785, நீரிழிவு நோய் கிளினிக் 0762363785 ஆகிய தொலைபேசி இலக்கங்களை உபயோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.