மக்களின் தேவை கருதி அரசாங்கம் தொடர்ந்தும் நிவாரணம் வழங்குவதற்கு முன்வரவேண்டும் மாறாக தற்பொழுது உள்ள சூழ்நிலையில் தேர்தல் நடத்த முயற்சி செய்வதென்பது  ஒரு பொருத்தமில்லாத விடயம்.

 முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் தெரிவித்தார்.

 மேலும் கருத்து தெரிவிக்கையில்

தற்பொழுது எமது நாடு ஒரு பயங்கரமான நிலையை அடைந்து கொண்டிருக்கின்றது

இந்த நேரத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது ஒரு பிழையான தீர்மானமாகும்
 இன்று மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் இவ்வாறான ஒரு தீர்மானத்தினை எடுப்பது சிறந்ததல்ல.

 மக்களின் நலன்களை கருதியே எமது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்
ஏனென்றால் பாராளுமன்றமாக இருந்தாலும் சரி அமைச்சரவையாக இருந்தாலும் சரி அதிகாரமாக இருந்தாலும் சரி இவை அனைத்தும் மக்களுக்கே உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

 நாட்டு மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் ஒரு மனநிலையில் இருந்தால் தான் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் அப்பொழுதுதான் மக்களுக்கு வாக்களிக்கும் என்ற ஒரு எண்ணம் ஏற்படும்.

 தற்பொழுது இருக்கின்ற மக்களின் மனநிலை வாக்களிப்பதற்கான எந்தவொரு மன நிலையிலும்  அவர்கள் இருக்கவில்லை.

 இவ்வாறான விடயங்களில் தேர்தல் ஆணைக்குழு மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஏனென்றால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தான் முழு அதிகாரம் இருக்கின்றது.

 நான் நினைக்கின்றேன் வருகின்ற ஜூன் மாதம் 20ஆம் திகதியில் கூட இத் தேர்தலை நடத்துவதற்கு முடியாமல்தான் இருக்குமென்று காரணம் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.

 தற்பொழுது அதிகாரங்கள் தேவைப்படுபவர்கள் எதிர்கட்சியில் உள்ளவர்ளுக்கே இதனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம்   செயற்படவேண்டும்.

ஆனாலும் நாம் இந்தத் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூறுவதற்கான பிரதான காரணம் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

 தற்பொழுது மரக்கறி வியாபாரிகள் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பல்வேறு கடன்களை பெற்று தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இதனை அறுவடை செய்து கூட விற்பனை செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை தற்போது காணப்படுகின்றது.

 இவ்வாறான இந்த சூழ்நிலையில் தேர்தல் ஒரு அவசியமற்ற ஒரு விடயமாகும்

பல நாடுகளில் 5000 ரூபாயை விட அதிகமான தொகையினை மக்களின் நலன் கருதி வழங்குகின்றார்கள்.

 அந்த வகையில் நிவாரண தொகையை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்

 அதேநேரம் 5000 ரூபா தொகையினை பெறாதவர்களுக்கும் ஒரு கொடுப்பனவை இனி வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.

 தற்பொழுது மீனவர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் கடந்த அரசாங்கத்தில் ஒவ்வொரு வருடமும் மீனவர்களுக்கு சுருக்கு வலை மீன் பிடிப்பதற்காக மீன்பிடி அமைச்சு மற்றும் மீன்பிடி திணைக்களத்தினால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தது உங்களுக்கு தெரிந்த விடயம் பின்பு தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் புதுப்பித்து வழங்கப்பட்டது.

 ஆனால் கடந்த நவம்பர் மாதம் ஆட்சிக்கு பின்பு இந்த அனுமதிப்பத்திரம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது தற்பொழுது இதனால் மீனவர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்கள்  தீர்க்கமான ஒரு முடிவை அவசரமாக எடுக்க வேண்டும்

 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூட தற்பொழுது தேர்தல்  நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு பிழையானது என தொடர்ச்சியாக கூறி வருகின்றார். என்றார்.

(ஆசிக் வதூத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.