பேருவளையில் கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று!

துசித குமார

வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி விடுமுறையில் பேருவளை-கனேஹரம்ப பங்களாவத்த பகுதிக்குச் சென்ற, கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (25) இரவு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த கடற்படை வீரர் சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பேருவளை பொதுச் சுகாதார அதிகாரி எச்.ஏ.டீ.சுரங்க தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 22 ஆம் திகதி விடுமுறையில் வீடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
இதற்கமைய,இவருடன் நெருக்கிப் பழகிய குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட 50 பேர் வீடுகளிலேயே, சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (26) இவர்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, பேருவளை பொதுச் சுகாதார அதிகாரி எச்.ஏ.டீ.சுரங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பேருவளை பகுதியில் மாத்திரம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 48 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்