"எவனாவது கெமராவை நீட்டிக்கொண்டு வந்தால் முகத்துக்கே காரித் துப்புங்கள்"


"எவனாவது ஊடகக்காரன் கெமராவை நீட்டிக்கொண்டு வந்தால் முகத்துக்கே காரித் துப்புங்கள்" என்ற வன்மமான அறைகூவலுடன் இப் பதிவை ஆரம்பிக்கின்றேன்.

தற்போது நிலவும் Covid 19 கொரோனா தொற்று, இதுவரை பேசப்படாத பல தலைப்புக்களை சமூகத்தின் பேசு பொருளாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

அந்த வகையில், கொரோனா தொற்றாளர் தொடர்பில் வெகுசன ஊடகங்களின் நடவடிக்கைகள்; செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஒரு சில வெகுசன ஊடகங்களும் அவற்றின் பிராந்திய ஊடகவியலாளர்களும் நடந்துகொள்ளும் ஊடக தர்மங்களுக்கு முரணான நடத்தை குறித்து அனைத்து மட்டங்களிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, சிறுபான்மை இனத்தவர் விடயத்தில் அவை நடந்துகொள்ளும் இனவாதப் பார்வை மனிதநேயமிக்க பெரும்பான்மை மனிதர்களினால் விமர்சிக்கப்படுவதும் கவனத்தைப் பெறுகின்றது.

அந்த வகையில், Ishara Danasekara தனது @IsharaDanasekar டுவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

"நீங்களோ, உங்கள் குடும்பத்தில் ஒருவரோ அல்லது உறவினரோ #Covid19 தொற்றுக்கு உள்ளானவர் என அடையாளம் காணப்பட்டாலோ அல்லது சந்தேகிக்கப்பட்டாலோ உங்கள் அந்தரங்கத் (தனித்துவத்தைப் privacy) பாதிக்கும் விதமாக, உங்களை சிரமத்துக்கு உள்ளாக்கிக் கொண்டு உங்கள் அனுமதி இல்லாமல் ஒளிப்படமோ வீடியோ பதிவுக்கோ வருகின்ற ஊடகங்களுக்கும் அவற்றின் ஊடகவியலாளர்களுக்கும் எதிர்ப்பைக் காட்டுங்கள். அது உங்கள் உரிமை."
#ethics #lk #media

இன்னுமொரு சகோதரன் நீளமான தனது கட்டுரையை பின்வருமாறு முடிக்கின்றான்:

"அடுத்த முக்கியமான விடயம் என்னவென்றால், எனது அனுமதியின்றி என்னை வீடியோ பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் என்னை வீடியோ பதிவுசெய்வதற்கு ஏதாவதொரு ஊடக நிறுவனத்தின் ஒருவன் வந்தால், அவனுடைய கெமரா நொருங்கும் வாய்ப்புள்ளது (பிரச்சினையை முகம்கொடுக்க நான் தயார்). ஊடகப் பயன்பாடு அந்தளவுக்கு நிலமையை தீவிரமாக்கி நாசப்படுத்தியுள்ளது".

[ අනෙක් වැදගත්ම කාරණය නම්, මගේ අවසරයකින් තොරව මාව වීඩියෝ කිරීමට මාධ්‍යයට අවසරයක් නැත. යම් කිසි හෝ මොහොතක මාව වීඩියෝ කිරීමට කිසියම් හෝ මාධ්‍ය ආයතයක එකෙක් ආවොත්, ඔහුගේ කැමරාව කුඩු වීමට ඉඩ තිබේ (අවධානම ගැනීමට මා සූදානම් ය). මාධ්‍ය භාවිතාව විසින් තත්ත්වය දරුණු කර විනාශයක් කර ඇත. ]

தமிழில்: Hisham Hussain, Puttalam
2020.04.28

கருத்துகள்