அரச, தனியார் ஊடகங்களின் சில ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் பகிரங்கமாகவே இனவாத கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இனவாதத்திற்கு எதிராக போராடும் ஒரு சமூக ஊடக செயற்பாட்டாளரை கைது செய்துள்ளமை அரசாங்கத்தின் மிகவும் மோசமான செயற்பாடு ஆகும் என்று முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக முகநூலில் சிங்கள மொழி மூலம் இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த சகோதரர் ரம்ஸி ராஸிக் தனது பதிவொன்றில் சிந்தனா ரீதியிலான போராட்டத்திற்கு, சிந்தனா ஜிஹாத் என்று குறிப்பிட்டிருந்தார். ஜிஹாத் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காகவே அவர் ICCPR இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது வேண்டுமென்று அவரை தண்டிப்பதாகவே கருதவேண்டியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதனை வன்மையாக கண்டிப்பதாக முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.