அத்தியாவசிய தேவைகளை (உணவு, மருந்து, ஆலோசனைகளை) அரசிடம் முறையிட இணையத்தளம் அறிமுகம்

Rihmy Hakeem
By -
0


இலங்கையில் உள்ள அனைவருக்கும்  ஜனாதிபதி தேசிய செயற்திட்ட மையத்தின் அன்பான வேண்டுகோள் ஒன்று.

COVID-19 தடுப்புக்கான தேசிய செயற்திட்ட மையத்தினால் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள "ராகேமுஅபி" அதிகாரபூர்வ இணையத்தளத்தினூடான https://rakemuapi.cmb.ac.lk/ கொரோனா கொவிட் 19 வைரஸின் பாதிப்பை குறைப்பதற்கும், அத்தியாவசிய உதவிகளைப் பெறுவதற்கும்  ஜனாதிபதி தேசிய செயற்திட்ட மையத்தினால் ("ராகேமுஅபி") இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

"ராகேமுஅபி"இணைய முகப்பின் ஊடாக சரியான தகவல்களை வழங்குவதன் மூலம்,
  • உங்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள.
  • அவசர நிலைமையின்போது அத்தியவசிய மருந்து மற்றும் உணவு வகைகளை பெற்றுக்கொள்ள.
  • நோய் பரவும் இடங்களை சரியாக அறிந்துகொள்ள மற்றும் முதியோர் சமூகத்தை பாதுகாப்பதற்கான உதவிகளை வழங்க அரசு எதிர்பார்க்கிறது.

 அதனூடாக கேட்கப்படும் தகவல்களை முழுமையாக பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்.

மேற்படி இணையத்தளம் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இராணுவமும் இணைந்து உருவாக்கியுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)