மூன்றாவது தொடர்..........................





ஹிட்லர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும், இவர்கள் மனிதப்பிறவிகளே அல்ல என்றுகூறி ஜேர்மனியில் வாழ்ந்த இலட்சக்கணக்கான யூதர்களை ஜேர்மன் இராணுவம் கொலை செய்தது.

அதில் எஞ்சிய யூதர்கள் பாலஸ்தீனை நோக்கி அகதிகளாக சென்றனர். இவர்களை பிரித்தானியா பத்திரமாக பலஸ்தீனில் குடியேற்றியது.

அத்துடன் 1916 இல் சியோனிச யூதத் தலைவர்களுக்கு பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்குவதற்கான அமைப்பு வேலைகள் கட்டம் கட்டமாக நடைபெற்றன.

யூதர்களுக்கென்று ஒரு தனியான நாடு இல்லாவிட்டாலும் அவர்களுக்கான “அகநா” என்னும் இராணுவ கட்டமைப்பும், பலமான புலனாய்வுத் துறையும் இருந்தது. இது 1897 இல் உருவாக்கப்பட்ட சியோனிச இயக்கத்தின் கீழ் உலகம் முழுவதிலும் செயல்பட்டு வந்தது.

இவர்கள், தமது எதிரிகளின் தகவல்களை திரட்டுதல், கடத்துதல், கொலை செய்தல் என ஏராளமான குற்றச்செயல்களை உலகம் முழுவதிலும் செய்து வந்தார்கள். அறிவாற்றல் அதிகமாக உள்ள யூதர்கள் உலகின் ஏராளமான நாடுகளில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றதனால் புலனாய்வுத் தகவல்களை திரட்டுவது இவர்களுக்கு இலகு.   

இந்த “அகநா” என்னும் இராணுவ கட்டமைப்புக்கு பிரித்தானியாவும், அமெரிக்காவும் உதவிகள் செய்தது. அந்தவகையில் ஆயுதங்கள், யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள், பீரங்கிகள், யுத்த விமானங்கள் என போருக்கு தேவையான ஏராளமான ஆயுத தளபாடங்கள் பலஸ்தீனப் பகுதிக்கு கட்டம் கட்டமாக கொண்டுவரப்பட்டன.

சுருக்கமாக கூறப்போனால் ஒரு இறமையுள்ள நாடு பலம்பொருந்திய தனது எதிரி நாட்டோடு யுத்தம் செய்வதற்கு ஆயத்தம் செய்வதை போன்று இருந்தது.

யூதர்களின் பலாத்காரமான குடியேற்றத்தை பாலஸ்தீன மக்கள் எதிர்த்தார்கள். ஆனால் அதற்குமேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கடவுளால் வாக்களிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற யூதர்களின் தேசமான “இஸ்ரேல்” என்னும் நாட்டின் அங்கீகாரத்துக்காக 1947 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றது.

யூதர்களின் இத்தனை செயல்பாடுகள் நடைபெற்றும் பாலஸ்தீனை சுற்றியிருந்த இறமையுள்ள அரபு நாடுகளினால் அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்த நாடுகள் அமைதியாக தூங்கிக்கொண்டு இருந்ததானது இஸ்ரேலின் கட்டமைப்பு வேலைகளுக்கு எந்தவித இடைஞ்சலையும் ஏற்படுத்தவில்லை.

பின்பு ஏற்கனவே திட்டமிட்டபடி 1948.05.14 இல் உத்தியோகபூர்வமாக இஸ்ரேல் என்ற பயங்கரவாத தேசம் உலகுக்கு பிரகடனப்படுத்தப்பட்டது. அதனை முதன் முதலில் அமெரிக்கா அங்கீகரித்தது. 

அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டு மறுநாள் இஸ்ரேலை சுற்றியுள்ள ஐந்து இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரேநேரத்தில் போர் தொடுத்தார்கள்.

ஆனால் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பின்னணி உதவியுடன் தனித்துநின்று போரிட்டு அந்த யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றிபெற்றது.

பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்ற தேசத்தை பிரகடனம் செய்யும்போது சுற்றியுள்ள அரபு நாடுகளிடமிருந்து வர இருக்கின்ற எதிர்ப்பினை முன்கூட்டியே ஊகித்ததனால் சியோநிஸ்டுகள் தங்களை இராணுவ ரீதியில் தயார்நிலைப்படுத்திய பின்பே தனி நாட்டு பிரகடனம் செய்தார்கள்.   

ஒரு சின்னஞ்சிறிய தேசம் அதுவும் பிரசவித்து மறுநாள், தன்னை சுற்றியுள்ள அனைத்து இறமையுள்ள பெரிய நாடுகளுடன் தனியே நின்று போர் செய்து வெற்றி பெறுவதென்றால் அது சாதாரன விடயமல்ல. இது அரபு நாடுகளுக்கு தலைகுணிவை ஏற்படுத்தியது.

இந்த வெற்றியானது இஸ்ரேல் என்னும் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் அதன் இமேஜை அதிகரிக்க செய்ததுடன், உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்துவந்த யூதர்களுக்கு அங்கு சென்று குடியேறுவதற்கு உட்சாகத்தை வழங்கியது.

வெள்ளம் கூரையளவு வந்தபின்பு அணைகட்ட அரபு நாடுகள் முயற்சித்தன. யூதர்கள் நன்கு திட்டமிட்டு கட்டம் கட்டமாக விமானப்படை மற்றும் மரபுவழி இராணுவத்தை பலப்படுத்திய நேரங்களில் அதனை தடுக்கக்கூடிய ஆற்றல் பாலஸ்தீனை சுற்றியிருந்த அரபு நாடுகளிடம் இருந்தது.

ஆனால் அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இஸ்ரேலின் திறமையை குறைத்து மதிப்பிட்டது மட்டும்மல்லாது அரபு நாடுகளின் புலனாய்வுத்துரையின் பலயீனமும் இதற்கு காரணமாகும்.

யூதர்களின் கட்டமைப்பு செயல்பாடுகளை ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால், இன்று இஸ்ரேல் என்னும் பயங்கரவாத நாடு உருவாகியிருக்க வாய்ப்பில்லை.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது

நாளை தொடரும்....................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.