வெலிசர கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளை விரைவுபடுத்த பட்டுள்ளதாகவும் மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி பூரணமாக முடக்கப்பட்டுள்ள தாகவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
24.04.2020 மேலும் 30 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை யடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தியுள்ளதாகவும், நாளை முதல் நாளொன்றுக்கு 400 பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை ஏற்கனவே உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் அடையவோ, கவலையடையவோ வேண்டாம் எனவும் கடற்படைத் தளபதி கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய கடற்படை வீரர்களிடம் கவனம் செலுத்தல், விடுமுறையில் சென்றிருந்தவர்களை மீள அழைத்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை கடற்படை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் (194 திருமணமான குடியிருப்புகள்) வெலிசர கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் முழு உரை பின்வருமாறு:
விடுமுறையில் இருந்தபோது பொலன்னறுவையைச் சேர்ந்த ஒரு கடற்படை வீரர் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிசெய்த பின்னர், பாதிக்கப்பட்டவருடன் அலுவலகத்தில் பணிபுரிந்த வெளிசர கடற்படை தளத்தில் உள்ள ஏனைய கடற்படை வீரர்களுக்கும் தொற்று பரவியுள்ளது தொடர்பாக கண்டறிய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வெலிசர கடற்படை வளாகத்தை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை முடக்கும் செயற்பாட்டினை கடற்படை உடனடியாக முன்னெடுத்தது. ஏறக்குறைய 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் (194 திருமணமான குடியிருப்புகள் வெலிசரா கடற்படை வளாகத்தில் அமைந்துள்ளன) முகாமுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் மிக விரைவில் பரிசோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அத்துடன் விடுமுறையில் இருந்த பாதிக்கப்பட்ட கடற்படை வீரருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய கடற்படை வீரர்கள் கடற்படைத் தளத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில், இலங்கை கடற்படை ஏற்கனவே நிறுவன அளவில் நன்கு திட்டமிடப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பணியில் ஈடுபட்டுள்ளதுடன், அதன் நடவடிக்கைகள் தற்போது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலுக்கேற்ப இடம் பெற்று வருகின்றன.
எனவே, கடற்படை வீரர்களின் ஆரோக்கியம் தொடர்பாக , பொது மக்கள் தேவையற்ற முறையில் கவலையடைய தேவையில்லை. மேலும், கடற்படை வீரர்கள் விடுமுறையில் இருந்தால் தற்காலிகமாக வீடுகளில் அடைத்து வைப்பதற்கும், வெலிசரா கடற்படை வளாகத்தில் உள்ள அனைத்து கடற்படை நடவடிக்கைகளையும் சுகாதார பரிசோதனைகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்குவதற்கும், வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறை அல்லது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து கடற்படை தளங்களில் இருந்து விலகி இருக்கும் கடற்படை வீரர்களின் தகவல்கள்கடற்படை தலைமையகத்தில் உள்ளன. விடுமுறையில் அல்லது தளத்திற்கு வெளியே இருக்கும் எந்தவொரு நபர் தொடர்பாகவும் தகவல் தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முடியும்.
கடற்படை தலைமையக செயற்பாட்டு அறை
தொலைபேசி : 0112445368/ 011719225
பேக்ஸ் : 0112441454
வட்ஸ்அப் : 0772201365
மின்னஞ்சல் : nhqdno@yahoo.com
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.