துப்பாக்கிப் பிரயோகத்தில் வனவிலங்கு அதிகாரி பலி!


கல் ஓயா தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் வனவிலங்கு அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேசிய பூங்காவை சுற்றிவளைக்க முற்பட்டபோது வேட்டைக்காரர்கள் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 25 வயதுடைய இங்கினியாகல வனவிலங்கு அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் போரா 12 துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள்