கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான மக்களை நினைவு கூரும் நிகழ்வு

உயிர்த்த ஞாயிறு தினம் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூர்வதற்கான நிகழ்வொன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் நேற்று (21) இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முஃப்தியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு, தொற்று நோய் நிலையை கருத்திற்கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட தொகையினரே அனுமதிக்கப்பட்டனர். மௌலவி முர்ஷித் துஆ பிரார்த்தனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்களான முஸ்லிம் ஸலாஹுதீன், கலீல் ஹாஜியார், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத் தலைவர் ஏ.பீ.எம். அஷ்ரஃப், அகில இலங்கை பள்ளி வக்பு சபை தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பிரதமரின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர் பௌசான் மன்ஸுர் மற்றும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ சமூகத் தலைவர்களும், பிரதேச கிறிஸ்தவ குடும்பங்களும் கலந்துகொண்டனர்.

கருத்துகள்