அத்தியாவசிய பொருள் கொள்வனவு விடயத்தில் இறக்காமம் பிரதேசத்தில் முறையான திட்டமிடல் இல்லை




சீனி வருத்தத்திற்கு வாரக் கணக்காக, மாதக் கணக்காக பத்தியம் காக்கின்ற ஒருவர், ஒரு தினம் வருகின்ற கல்யாண வீட்டுக்கு சென்று மூக்கு முட்டும் வரை திண்டுட்டு, high sugar றோடு வீட்டுக்கு வருவது போன்றுதான் இப்பிரதேசமும் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் காணப்படுகின்றன.

Ol. நடமாடும் வியாபார சேவை:

இறக்காமம் பிரதேசத்தை  3 / 4 பகுதிகளாகப் பிரித்து, குறிப்பிட்ட உள்ளூர் வியாபாரிகளைக் கொண்டு நடமாடும் வியாபார சேவையை வழங்குங்கள். இதற்காக வியாபாரிகளுக்கு சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்க முடியும்.

இவை அல்லாமல் போகின்ற போதுதான் எல்லோரும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் தினத்தை எதிர்பார்த்திருந்து, அத்தினத்தில் ஒரு மரக்கறி லொறியைக் கண்டால் சனங்கள் குழுமி நிற்பதும் போட்டி போடுவது மாகும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வியாரிகளும் கூடிய விலைக்கு விற்று விடுகிறார்கள். வியாபாரிகள் சில விட்டுக் கொடுப்புடன் சேவையாற்ற முன்வாருங்கள்.

ஒன்று கூடுவதைக் கட்டுப்படுத்தும் ஒரே வழி இது மட்டுந்தான்.

02. வெளியூர் தொடர்புகளைக் கட்டுப்படுத்தல்:

என்னதான் சட்டங்களும் அறிவுரைகளும் வழங்கினாலும் பொதுமகன் ஒவ்வொரு புத்தியில் இருப்பவன். சட்டங்களும் அதிகாரங்களும் பயன்படுத்தப்படுகின்ற போது, சில தனி நபர்களும் குழுக்களும் பாதிக்கப்படுவது இயல்புதான். அந்த சிலருக்காக முழுமொத்த சனங்களின் நலவுகளை எப்படி பாழ்படுத்த முடியும்?

எனவே, பொலிஸாரின் உதவியுடன் இப்பிரதேசத்தின் (எல்லைக் கிராமங்கள் உட்பட) நுழை வீதிகளின் கட்டுப்பாட்டை பலப்படுத்துங்கள். (வெளியூர் மீன் வியார்கள் உட்பட).

சட்டம் போட்டு விட்டோம் ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்து விட்டோம். எம் கடமை தீர்ந்தது என்ற மட்டில் இருந்து விடாமல், சட்டத்தை முழுமையாகப் பிரயோகிக்கத் தூண்டும் வகையில் பள்ளிவாசலும், பிர.செயலகமும், பிர.சபையும் முன்வர வேண்டும்.

03. இளைஞர்களும் வயோதிபர்களும் சட்டத்தை மதியுங்கள். இந்த இரண்டு வகுப்பினரும்தான், இன்றுள்ள பெரிய சவால்.

செய்யாதே என்பதையே சிறு பிள்ளைகள் மீண்டும் மீண்டும் செய்ய முனைவது போல், 18 வயது இளைஞர்கள் இரத்தக் கொதிப்பால் ஓடித் திரிகிறார்கள்... 50 வயது வயோதிபர்களோ சொல்வதை எல்லாம் கிளிப்பிள்ளை போல் கேட்டு விட்டு, எங்களுக்கு பொலிஸ்காரன் அடிக்க மாட்டான் என்ற தைரியம் அவர்களுக்கு.

முடிவுரை:

– வெளியூர் தொடர்பை சில தினங்கள் வரை முற்று முழுவதுமாக கட்டுப்படுத்துவதாகும்...

– நடமாடும் வியாபார சேவை...

இறக்காமம் பிரதேச அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், பிர.சபை, DS முன் வருவார்களா?

(லரீப் சுலைமான்)

கருத்துகள்