#வீட்டில்தங்கும்கதை போட்டி என்ற போட்டி சர்வோதயா-ஃப்யூஷன்இ ஐ.சி.டி.ஏ மற்றும் பேஸ்புக்கின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ICTA நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொழும்பு, 2020 ஏப்ரல் 21. சர்வோதயா-ஃப்யூஷன் ஆனது இந்த முடக்கப்பட்ட காலகட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) மற்றும் பேஸ்புக் உடன் இணைந்து #வீட்டில்தங்கும்கதை போட்டியைத் தங்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் 2020 ஏப்ரல் 12 ஆம் தேதி ஆரம்பித்துள்ளது.
 சமூக ஊடகப் பயனாளிகள் படைப்பாற்றல் முறையில் நீங்கள் வீட்டில் தங்கியிருக்கும் கதையினை ஹேஸ்டேக் #வீட்டில்தங்கும்கதை ஊடாகப் பகிர்வதன் மூலம் இந்தப் போட்டியில் உள்நுழைய முடியும். தனிநபர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் ஓவியங்கள், குறுகிய காணொளிகள், கேலிச் சித்திரங்கள், புகைப்படங்கள் மற்றும் அனிமேஷன்கள் போன்ற ஒரு ஊடகத்தைத் தேர்ந்தெடுக்கலாம், மேலும் தங்கள் உள்ளீடுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களைப் பயன்படுத்தி 2020 மே மாதம் 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக #stayhomestory /#ගෙදරකතා /#வீட்டில்தங்கும்கதை ஆகிய ஏதேனுமொரு ஹேஷ்டேக்குடன் தங்கள் சொந்தக் காலவரிசையில் இடுகையிடலாம்.
உள்ளீடுகளானது ஓவியம், காணொளி மற்றும் புகைப்படம் ஆகிய பிரிவுகளில் குழுக்களாக்கப்படும். போட்டியில் நுழைந்த அனைவருக்கும் டேட்டா பேக் வெகுமதி வழங்கப்படும். ஒவ்வொரு குழுவின் இறுதி வெற்றியாளர்களுக்கும் பணப் பரிசுகள் மற்றும் பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கப்படும்.
"இந்தப் பிரசாரத்தின் மூலம், ஆக்கபூர்வமான செயல்முறையானது சாதகமான முறையில் பரவலடையும், மக்களின் மன அழுத்த அளவைக் குறைக்கும் மேலும் அவை அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என சர்வோதயா-ஃப்யூஷனின் பொது முகாமையாளர் திருமதி. மைத்ரி மால்வத்தேகொட அவர்கள் கூறுகிறார். மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சமாளிக்க, அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொண்ட தீர்வுகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பை வழங்கும்.”

கோவிட் 19 என்ற கொடிய வைரஸைக் கட்டுப்படுத்த இலங்கையும், உலகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது நெருக்கடிக்கு ஆளாகின்றன. இங்கே எங்கள் தீவில், குழந்தைகள் உட்பட மக்களின் வாழ்க்கை முறைகள் சீர்குலைந்து, வெறுப்பாகிவிட்டன, ஏனெனில் அவர்கள் சிறிய அல்லது சமூகத் தொடர்பு இல்லாத வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 
"நடைமுறையிலிருக்கின்ற ஊரடங்கு உத்தரவுகளின் கீழ் பௌதீக இடைவெளி உள்ளது என்பது உண்மைதான், ஆனால் இணையத்துடனான சமூகத் தொடர்புகள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதைக் குறைவாக உணர வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என மால்வத்தேகொட அவர்கள் கூறுகிறார்.

மேலும், இந்தப் பிரசாரத்தின் மற்றுமொரு நோக்கம் இணையமற்ற சமூகத்தை அடைவது மற்றும் அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தொடர்பாடலுக்கு டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்துவதனை ஊக்குவிப்பதும் ஆகும். இந்த முடக்கப்பட்ட காலகட்டத்தில் டிஜிட்டல் செயலிகள் மற்றும் சேவைகளைத் திறம்பட பின்பற்றுவதற்குக் குடிமக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று ஐ.சி.டி.ஏ எதிர்பார்க்கிறது.
மேலும், சர்வோதயா-ஃப்யூஷன் மற்றும் ஐ.சி.டி.ஏ ஆகியவை இந்தப் பொது ஈடுபாட்டுத் தளங்களைப் பயன்படுத்தி சமூகங்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கும், தொற்று நோயால் மக்கள் கொண்டுள்ள கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் விரும்புகின்றன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.