ருவென்வெல்ல தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சியின் பிரதம அமைப்பாளராக நிஹால் பாறுக் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கையளித்தார்.
இச்சந்தர்ப்பத்துக்கு முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம். பாறுக்கும் பிரசன்னமாகி இருந்தார்.
ருவென்வெல்ல தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளராக நீண்ட காலமாக முன்னாள் அமைச்சர் பாறுக் இருந்து வந்தார். அதன்பிறகு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷித தென்னக்கோன் பணிபுரிந்தார்.
துஷித தென்னக்கோன் இம்முறை சஜித் அணியில் போட்டியிடுகின்றார்.
இதேநேரம் நிஹால் பாறுக் ஐ.தே.க.வின் யானைச் சின்னத்தில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக