கொரோனா அச்சம் காரணமாக நாரஹேன்பிட்ட BOC மூடப்பட்டது


கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் அவ் இடங்கள் முடக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாரஹேன்பிட்டியவில் உள்ள முகாந்திரம் ஈடி டாபரே மாவத்தையில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நாரஹேன்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர், இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அடுத்து நாரஹேன்பிட்டி இலங்கை வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது வரை 588 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதோடு 7 பேர் உயிரிழந்துள்ளனர். 134 குணமடைந்துள்ளனர்.

(தமிழினி)

கருத்துகள்