பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் CaFFE (நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்) அமைப்பு வலியுத்தியுள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இதனை தெரிவித்துள்ளார்.

ஜூன் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என்று தாம் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களை நோக்கும் இடத்து எதிர்காலத்தில் இன்னும் அதிகமானவர்கள் இனம் காணப்படும் சூழ்நிலையே நிலவுவதாகவும், அதனால் தேர்தலுக்கான சூழல் உருவாக்கப்படுவது சாத்தியம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான சூழலை ஏற்படுத்துவது நடைமுறையில் கடினமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

சில வேட்பாளர்கள் உணவுப் பொதிகளை வழங்கி தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதுபோன்ற தேர்தல் விதிகளுக்கு முரணான செயற்பாட்டின் மூலம் மக்களே பாதிப்படைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச சார்பு கட்சிகள் மாத்திரமே தற்போதைய நிலைமையை சரிவர பயன்படுத்திக்கொள்வதாகவும், மற்ற கட்சிகளும், குழுக்களும் இதனால் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான நிலையில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை கோருவதற்கான சூழல் ஏற்றதாக இல்லை எனவும் எனவே மேற்குறித்த காரணங்களை கருத்திற்கொண்டு பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என்றும் மனாஸ் மக்கீன் கோரிக்கை விடுத்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.