தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) பஷிலுக்கு அனுப்பிய கடிதம்


திரு. பஷில் ராஜபக்ஷ,
பொறுப்புவாய்ந்த அலுவலர்,
அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்லல் மற்றும் 
ஒருங்கிணைப்பு, பின்னாய்வு நடவடிக்கைகள் தொடர்பில் தாபிக்கப்பட்ட 
ஜனாதிபதி செயலணி, 
பிரதமர் அலுவலகம்,
மல்வத்த வீதி,
கொழும்பு 07.

2020 ஏப்ரல் 06

கொவிட் - 19 தொற்று நோய் ஒழிப்பு பணிகளுக்கு இணையான நிவாரணமளிப்பு நடவடிக்கைகள்
அன்பின் பஷில் ராஜபக்ஷ அவர்களே,
யாரும் எதிர்பாராத ஆயினும் மிகப் பயங்கரமான தேசிய இடர் நிலைமை ஏற்பட்டுள்ள ஓர் பின்னணியில் ஒட்டுமொத்த இலங்கையரினதும் விடாமுயற்சி மற்றும் திடகாத்திரமான அர்ப்பணிப்பினை பறைசாற்றும் ஓர் தீர்மானமிக்க சந்தர்ப்பத்தினை நாம் அனைவரும் அடைந்துள்ளோம் என்பதே எமது கருத்தாகும். அவ்வாறானதொரு தேசிய அளவிலான மாபெரும் பொறுப்பினை சரியாகவும் செயற்றிறன் மிக்கதாகவும் ஒழுங்கமைப்பு செய்வது அரசின் கடமையாதல் வேண்டும். அதன் போது தற்போதைய அரசாங்கம் இது வரையில் மேற்கொண்டுள்ள பல்வேறான தொடக்கங்கள் இந்த தொற்று நோயினை இல்லாதொழிக்கும் வகையில் பெரும்பாலும் உறுதுணையாக இருந்ததென்பதும் எமது கருத்தாகும்.

அது மட்டுமன்றி புதிதாக தாபிக்கப்பட்ட செயலணியின் செயற்பாடுகளும் மேற்படி இடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கிலான மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு செயற்படுமென்பது எமது நம்பிக்கையாகும்.

அதற்கு இணையாக அத்தியாவசியமாக கவனத்திற்கொள்ள வேண்டிய தீர்மானமிக்கவொரு காரணி தொடர்பில் தங்களதும் தங்களது செயலணியினதும் கவத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட Pவுகு 03/2020 என்ற இலக்கமுடைய சுற்று நிருபம் தொடர்பில் கவனத்தினை செலுத்த வைக்க விரும்புகிறேன்.  அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமானது, “ஏற்பட்டுள்ள தொற்றுநோய் நிலைமை காரணமாக சமூக பயனாளிகளுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் காத்திருப்பு பட்டியலில் இருக்கின்ற பயனாளிகளுக்கு ரூபா 5,000 கொடுப்பனவு வழங்கப்படும்” என்றவாறாகும். 

பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் உதவி கோரி நிற்கின்ற சகோதர மக்களுக்கு சரியான வேலைத்திட்டத்தின் கீழ் நிவாரணங்கள் வழங்குதலை முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பொறிமுறை தொடர்பில் முதலில் எமது பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகின்றோம். ஆயினும் இங்கு எழுகின்ற வெளிவாரியான எனினும் துரித அவதானம் செலுத்த வேண்டிய விடயங்கள் பல உள்ளதையும் சுட்டிக் காட்டுகின்றோம். அவ்விடயங்கள் தொடர்பில் தங்களது செயலணியை தெளிவுபடுத்துவது தேர்தல் கண்காணிப்பு அமைப்பு என்ற வகையில் எமது கடமை என்பதே எமது கருத்தாகும்.

கிராமிய மட்டத்தில் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்காக முன்மொழியப்பட்ட குழுவிற்குள் உள்ளடங்கும் உறுப்பினர்கள் அறுவருக்கிடையில் முதலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளவர் பிரதேசத்தின் அரசியல் வேலைத்திட்டங்களை வழிநடாத்தும் மக்கள் பிரதிநிதி ஒருவரது பிரதிநிதித்துவமாகும். அதாவது சுற்றுநிருபத்தின் படி உள்ளுராட்சித் தொகுதியின் பிரதிநிதியாகும்.

மேற்படி பிரதிநிதித்துவத்தை அடையாளம் காண்கின்ற போது மற்றும் ஒன்றாக இணைந்து பணியாற்ற விளைகின்ற போதும் பிரதேசத்தின் பிரதேச செயலாளர் உட்பட கிராம அலுவலர் ஆகியோர் பெரும் சங்கடங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதோடு அது தொடர்பிலான முறைப்பாடுகள் எமது நிறுவனத்திற்கு தற்போது பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவான காரணங்கள் பின்வருமாறு.

01. நாட்டில் இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது கலப்பு முறையிலேயே இடம்பெற்றது. அது 60% மற்றும் 40% என்ற வகையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையில் இடம்பெற்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தொகுதிவாரி பிரதிநிதிகள் மிகக் குறைந்தளவான வாக்குளினாலேயே தெரிவு செய்யப்பட்ட அதேவேளை அவ்வாறான தெரிவுகள் பத்து வாக்குகளையும் விடக் குறைவான அளவில் பெற்ற சந்தர்ப்பங்கள் மிக அரிது. மேலும் விகிதாசார முறைமையின் கீழ் 40% என்ற அளவில் பெயரிடப்பட்ட பிரதிநிதிகளுக்கு உறுதியான வட்டாரமொன்று காணப்படுவதும் இல்லை. அவ்வாறானதொரு பிரதிநிதியை இப்படியானதொரு வேலைத்திட்டத்தில் நிலைநிறுத்துவது எந்த வகையில் என்பது சிக்கலான விடயமாகும்.

02. இதனால் பாரதூரமான வகையில் சங்கடங்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய மற்றுமொரு  தரப்பிராக இருப்பது உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக காணப்படுகின்ற பெண் உறுப்பினர்களாவர். மொத்தமாக 1919 பெண் உறுப்பினர்கள் இருக்கிகின்ற அதேவேளை அவர்களுள் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 537 மாத்திரமே. அதற்கான காரணமாக இருப்பது குறித்த வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களாக இருப்பது அந்த அளவினை விடவும் குறைவான பெண்களின் எண்ணிக்கையாக காணப்படுவதேயாகும். அதன்படி ஏனைய 1382 பெண் பிரதிநிதிகள் அனைவரும் நிச்சயமற்றதும் அரசியல் ரீதியாக ஒருவகையில் செயலிழந்தவர்களாக மாறக்கூடிய ஓர் ஆபத்தான நிலைமையும் காணப்படுவதனை அத்துனை இலகுவாக கைவிடக் கூடிய விடயமன்று.

03. உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றிலும் குறித்த தவிசாளர்களும் கூட தெரிவு செய்யப்பட்டமையானது நாணய சுழற்சி முறைமையிலாகும். மேலும் நாட்டின் பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சுமார் பத்து பேரளவில் தெரிவு செய்யப்பட்டதும் இந்த வகையில் தான். அவ்வாறான வெறும் தொழிநுட்ப விடயத்தின் காரணமாக பதவிகளை இழந்த மக்கள் பிரதிநிதிகளை இவ்வாறான பொறிமுறையிலிருந்து அகற்றி விடுவது அந்தளவு பொருத்தமானவொரு விடயமாக அமையாது என்பது எமது கருத்தாகும்.
இப்படியானதொரு தேசிய அனர்த்தம் ஏற்பட்டுள்ள பின்னணியில் நிச்சியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தினை வீழ்ச்சியடைய வைப்பதோ அல்லது சிக்கல் நிலைமையினை ஏற்படுத்துவதோ எமது எதிர்பார்ப்பன்று. ஆயினும் அப்படியானதொரு செயற்பாடு மேற்படி தெளிவுபடுத்தப்பட்ட வகையிலான பின்னணியில் நடைமுறைப்படுத்துவதும் தங்களது மற்றும் தங்களது செயலணி மேற்கொள்ள முயற்சிக்கும் நற்பணியினை சவாலுக்குட்படுத்தும் ஒரு வியடமாக அமையும்.
இவ்வாறானதொரு சூழலில் மேற்கொள்ள வேண்டிய முறைமையாக நாம் கருதுவது யாதெனில், யாதாயினும் வட்டாரமொன்றில் போட்டியிட்டு குறைந்தளவான வாக்கு வித்தியாசததில் உறுப்பினர் பதவியை இழந்த வேட்பாளருக்கேனும் மேற்படி குழுவில் உறுப்பினராவதற்கான அழைப்பினை விடுத்திருக்க வேண்டுமென்பதாகும். இதற்கு மேலதிகமாக குறிப்பட்டதொரு வட்டாரத்தின் பிரதிநிதித்துவத்தினை கொண்டிராத ஆயினும் உள்ளுராட்சி மன்றத்தின் உறுப்பினராக பதவி வகிக்கின்ற பெண் உறுப்பினர்கள் உட்பட ஏனைய தரப்பினரும் அவர்களது விருப்பத்தின் படி மற்றும் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் குழுவில் இணைத்துக் கொள்வதே தற்போதைய சிறப்பான வியடமாகும்.
மேலும் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் உட்பட ஏனைய கிராமிய மட்டத்திலான அரச அலுவலர்கள் மிகச் சிறப்பான வகையில் தமது பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், இவ்வாறான குழுக்களுடன் தொடர்புடையதான விடயங்களில் அவர்களை முயற்சியற்றவர்களாக மாற்றும் நடவடிக்கை எவ்விதத்திலும் இடம்பெறக் கூடாத ஒன்றாகும்.
அத்துடன் மேற்படி உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைமை முதற் தடவையாக வரைவு செய்யப்பட்டதும் தங்களது அலோசனை மற்றும் தலைமைத்துவத்தின் கீழாகும் என்பது நாடறிந்த தெளிவான வியடமாகும். அவ்வாறானதொரு பின்னணியில் யாதாயினுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது சிறு அளவிலான அரசியல் பிரதிநிதிகளுக்கு மாத்திரம் அரச பொறிமுறையில் பிரதிநிதித்துவம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையானது உள்ளுராட்சி மன்றம் போன்றவோர் துறையில் மிக அவதானமிக்கதும் நாம் தொடர்ச்சியாக கட்டியெழுப்ப முயற்சிக்கின்ற உடன்பாட்டு அரசியல் தொலைநோக்கினை இழிவுபடுத்துகின்ற முயற்சி என்பது அத்துனை இலகுவில் கைவிட்டு விட முடியாத ஒரு தர்;க்கமாகும்.   
நாம் மேலே தெரிவித்தபடி, செயலணியின் கடமைகள் நிச்சயமாக அவசியமாகும் ஓர் பின்னணி தற்போது நாட்டில் ஏற்பட்டிருப்பதோடு அதில் முறையானதொரு கையாளுகையினை எதிர்பார்ப்பில் மட்டுமன்றி வேண்டுகோள் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டிருப்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 
மேலும் மேற்படி விடயம் தொடர்பில் தங்களது துரித கவனம் செலுத்தப்படும் என்பதனையும் நாம் நம்புகின்றோம்.
நன்றி,

மஞ்சுள கஜநாயக்க,
தேசிய ஒழுங்கிணைப்பாளர்,
தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்

பிரதிகள் :
01. திரு. மஹிந்த தேஷப்பிரிய, தவிசாளர், தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் செயலகம், சரண வீதி, இராஜகிரிய.

02. பிரமதரின் செயலாளர், பிரதம செயற்பாட்டு அதிகாரி, அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்லல் மற்றும் ஒருங்கிணைப்பு, பின்னாய்வு நடவடிக்கைகள் தொடர்பில் தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பிரதமர் அலுவலகம், மல்வத்த வீதி, கொழும்பு 07. 

03. திரு. சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஆணையாளர் நாயகம், தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் செயலகம், சரண வீதி, இராஜகிரிய.

கருத்துகள்