அண்மைக்காலமாக தெரண தொலைக்காட்சி ஊடாக முஸ்லிம்களை அதிருப்திக்குள்ளாக்கிவருகின்ற செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் சதுர அல்விஸுக்கு எதிராக அரச மருத்துவர் சங்கம் தெரண முகாமைத்துவத்துக்கு முறைப்பாடு செய்துள்ளது.

ஊடகவியலாளரான சதுர அரச மருத்துவர் சங்க உத்தியோகத்தர்களை அதிதிருப்திக்குள்ளாக்கும் வகையில் தனது ஊடகத்தில் செயற்பட்டு வருவதாக இக்கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயத்தில் சதுர அரச மருத்துவர் சங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டாலும் அண்மைக்காலமாக இவரது செயற்பாடு குறித்து தமக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 21ஆம் திகதி காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து எமது அங்கத்தவர்களது கவனத்தக்கு ஈர்க்கப்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருந்துத் தட்டுப்பாடு தொடர்பாக தமது சங்கம் அடிக்கடி தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பாகவே இவர் விமர்சித்து, இந்த மருந்துகளைத் தருவிப்பதில் ஒரு மருந்து மாபியா இருக்கின்றது. அதில் மருத்துவர் சங்கத்துக்கும் தொடர்பிருக்கின்றதாக குறிப்பிட்டிருந்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.