கொரோனா நோயாளர்களுக்கு தனியாக கடமை புரிந்தவர்களில் மபாஷா ரஷீடும் ஒருவர். இஸ்லாமிய பெண்ணாக இருந்தும் தனது கடமை உணர்வால் பெரும்பான்மை மக்களால் கவரப்பட்டு வரும் ஒரு இளம் முஸ்லிம் தாதியாகும்.
ஒருவரின் கடமை உணர்வு வேலைத்திறன் நல்ல பண்பாடு நடத்தைகள் இருந்தால் ஒருவருக்கு புகழ் கூடவே தேடிவரும்.
அப்படி ஒரு பெண் தான் மபாஷா ரஷீத் அங்கொடை IDH வைத்தியசாலையில் தனி முஸ்லிம் தாதியாக இணைந்து தொழில் செய்து திறமையான ஒரு முஸ்லிம் தாதியாக வலம் வருகின்றார்
இவரை அந்த பெரும்பான்மை இன மக்கள் புகழ்ந்தமைக்கு இவரிடம் இருக்கும் நல்ல குணங்கள் தான் காரணம்.
அனைத்து நோயாளிகளிடமும் மலர்ந்த முகத்துடன் சேவை செய்து வந்துள்ளார்.
நேரம் பாராமல் கடுமையாக உழைக்கும் இவரின் திறன் மற்றும் மனப்பூர்வமான சேவைகள் தொடர்பான ஒரு சில இவரது முகநூல் பதிவுகளே இவர் மீதான இத்தனை புகழ்களுக்கும் காரணம்..
(News saranteeb)
கருத்துகள்
கருத்துரையிடுக