நேற்று (20) பெய்த மழை மற்றும் வீசிய காற்றினால் சேதமாக்கப்பட்டுள்ள  கஹட்டோவிட்ட ஹிஜ்ரா மாவத்தையில் உள்ள ஏழை குடும்பம் ஒன்றிற்கு முஸ்லிம் யூத் ஐலன்ட்வைட் எனும் புத்திஜீவிகள் அரசியல் வாதிகள் கல்விமான்கள் சட்டத்தரணிகள் உள்ளடங்கி சமூகத்தின் சமகால சவால்களையும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்னெடுத்து வரும் வட்ஸப் குழுமத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் தனவந்தர்களின் முயற்சி மற்றும் பங்களிப்பில் சுமார் 45000/- ரூபாய்   பணத்தொகையை வசூலித்து இன்றைய தினமே கூரைத்திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் அந்த நிதியில் இருந்து ஒரு பகுதிக்கு வறிய கஷ்டப்படும் மக்களுக்கு உலர் உணவு பொருட்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயங்களாகும்.

யாரெல்லாம் இந்த நல்ல முயற்சிக்கு உதவினார்களோ முயற்சி செய்தார்களோ பணத்தால் உழைப்பால் வழிகாட்டல்களால் உதவி செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாகவும் அவர்களின் இம்மை மறுமை தேவைகளை நிறைவேற்றி கொடுப்பானாகவும்.

இந்த முயற்சியை அந்த குரூப்பின் அட்மின்களில் ஒருவராகிய ஹர்சான் அவர்கள் குரூப்பின் கவனத்துக்கு கொண்டு வந்ததன் விளைவாகவும் அயராத முயற்சியின் பலனாகவும்  சகோதரர் ஹர்சான் மற்றும் சட்டத்தரணி நியாஸ் மொஹம்மத் மற்றும் சகோதரர் ரியாஸ் அவர்களுக்கும் இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகளை குடும்பம் சார்பிலும் பாதிக்கப்பட்ட மக்கள்சார்பிலும் ஊர்மக்கள் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொகுப்பு:
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.