இவ்வாண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, வீட்டிலிருந்து தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர, 1377 எனும் இலக்கம் மூலமாக விசேட தொலைபேசி சேவையை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு இவ்விசேட இலவச தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டு வேண்டுகோளுக்கிணங்க, டயலொக் நிறுவனத்தின் பிரதான பங்களிப்புடன், தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் மொபிடெல், எயார்டெல், ஹட்ச், ஶ்ரீ லங்கா ரெலிகொம், லங்கா பெல் ஆகிய தொலைபேசி சேவை வழங்குனர்கள் இணைந்து இம்முயற்சியை மேற்கொண்டுள்ளன.
பெற்றோர் எந்தவொரு வலையமைப்பின் ஊடாகவும், 1377 எனும் இலக்கத்தை அழைப்பதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பை வழங்க முடியும்.
இந்த சேவைக்கு தொலைபேசி கட்டணம் எதுவும் இல்லை என்பதோடு, சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம்
ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இதற்காக தொடர்புபடுத்தப்படுவார்கள் என்பதோடு, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தாய்மொழி தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்கள் தொடர்பான எந்தவொரு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இதன் மூலம் பதில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக