கொரோனா தொற்றுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுவது ஆய்வறிவு சார்ந்த அடிப்படையில் மாத்திரமே என்று சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுவது ஆய்வறிவு சார்ந்த அடிப்படையில் மாத்திரமே ஆகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பல்வேறு பிரதேச மக்கள் மற்றும் மக்கள் குழுக்களினால் PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கோரிக்கைகளை முன்வைப்பது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க அவர்கள் விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார். கோரிக்கைகளை முன்வைப்பதையடுத்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் பரிசோதனை இதுவல்ல என்றும் விஞ்ஞான விடயங்களின் அடிப்படையில் சுகாதார பிரிவினால் தீர்மானிக்கப்படும் பரிசோதனை ஒன்றாகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
ஆய்வறிவு சார்ந்த விடயங்களின் அடிப்படையிலான தீர்மானங்களின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்படும் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 5 அல்லது 6 மணித்தியாலங்கள் போன்ற காலஎல்லை செல்லும் இதற்காக செல்லும் கால எல்லை , ஈடுபட வேண்டிய பணியாளர்கள், போன்று செலவு தொடர்பிலும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவரையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை விழிப்பு நிலை தொடர்பாக கவனத்தில் கொண்டு தெரிவுசெய்யப்பட்டவர்கள் மற்றும் நோய் அச்சுறுத்தல் தொடர்பாக சந்தேகத்திற்குரிய குழுக்களுக்காகவே ஆகும் என்றும் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறினார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவோர், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ள நபர்கள் மற்றும் நோய் காணப்படுவதாக சந்தேகத்திற்குரிய பெரும்பாலான நபர்களுக்காகவே இதுவரையில் PRC பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை , கொவிட் 19 தாக்கமற்றவர்கள் என சான்றிதழ் வழங்குமாறு சில நபர்கள் கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான எந்த சந்தர்ப்பங்களிலும் கூட நோய் அறிகுறிகள் கொண்ட அல்லது இல்லாதவர்கள் என்று மாத்திரமே தெரிவிக்க முடியும்
PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டிய நபர்கள் யார் என்பது சுகாதார பிரிவு மற்றும் உரிய அதிகாரிகளே தீர்மானிப்பார்கள் என்பதுடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்று பொதுமக்களினால் கோரிக்கை முன்வைப்பது அவசியமற்றது என்றும் வலியுறுத்தப்படுகின்றது.
இதுவரையில் நாடு முழுவதிலும் 13 ஆய்வுகூடங்களில் PRC பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இன்று முதல்; (2020.04.18) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் இந்த பரிசோதனை ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த அனைத்து பரிசோதனைகள் வைரசு நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் நிபுணர்கள், மைக்ரோ , உயிரியலில் வல்லுநர்கள் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் பங்களிப்புடனேயே மேற்கொள்ளப்படுகின்றது. பரிசோதனை பண்முகப்படுத்தப்பட்ட போதிலும் இந்த அனைத்து பரிசோதனை நடவடிக்கைகளின் பரிசோதனை செயற்பாடுகள் உரிய நிர்ணயத்திற்கு அமைவாக சரியான அளவுகோல்களின்படி துல்லியமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்; மாத்திரம் (2020.04.16) சுகாதார அமைச்சினால், PCR பரிசோதனைகள் சுமார் 500 இற்கும் மேற்பட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் எந்தவொரு நோய்தொற்றுக்கு உள்ளானவர்கள் குறித்த தகவல்கள் பதிவாகவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபணர் அனில் ஜாசிங்க மேலும சுட்டிக்காட்டினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.