நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களை அடையாளங்காண்பதற்கான PCR பரிசோதனைகளை ஆயிரமாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
தற்போது நாளாந்தம் இவ்வாறான பரிசோதனைகள் 800 மாத்திரமே மேற்கொள்ளப்படுவதினால் தற்போதைய கொரோனா தொற்றின் நிலைமையைக்கருத்திற்கொண்டு நான்கு தனியார் வைத்திய சாலைகளின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களை அடையாளங்காண்பதற்கான பரிசோதனையை அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றில் உள்ளவர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களில், நாளொன்றுக்கு சுமார் 800 மாதிரிகள் அரசாங்க சுகாதார பிரிவினால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவதோடு, இந்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் ஆலோசனையை முன்வைத்துள்ளனர். இதன் மூலம் பெருமளவிலான நோயாளர்களை அடையாளம் காணமுடியும் என அவர்கள் சுட்டிக்காட்யுள்ளனர்
இதற்கமைலாக PCR  பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலைகளில் உதவியுடன் மேற்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல்,இராஜகிரியவில் உள்ள கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் இன்று (23) முற்பகல் நடைபெற்றது
சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க சுகாதார அதிகாரிகள் தனியார் வைத்தியசாலைகளில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது நாளொன்றுக்கு தனியார் வைத்தியசாலை ஒன்றின் மூலம் 100 மாதிரிகளை பரிசோதனை செய்து அறிக்கைகளை வழங்க முடியும் என தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநதிகள்  தெரிவித்திருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களை அடையாளங்காண்பதற்கான PCR பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.