இலங்கையில் கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் வகிபாகம் மற்றும் இலங்கை ஆயுதப் படைகளின் கோவிட்-19 தொற்று நோய்க்கெதிரான அர்பணிப்பிற்கு வலிமை சேர்கும் முகமாக, அவுஸ்திரேலிய பாதுகாப்பு துறையானது தனது ஒத்துழைப்பினை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலத்தின் ஊடாக பிரத்தியேக பாதுகாப்பு உபகரண சீருடை (பிபிஈ) மற்றும் கை உறைகள் போன்றவெற்றை நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் நேற்று காலை 29 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து வழங்கியது.
இதில் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய அன்செல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 150000 அவுஸ்திரேலியன் டொலர் பெறுமதியுடைய 10200 உயர் தரமான பிபிஈ சீருடைகள் மற்றும் 200000 கை உறைகள் ஆகியன உத்தியோகபூர்வமாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ டேவிட் ஹோலி அவர்களினால் நொப்கோவின் தலைவர் லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் வழங்கினார்.
இலங்கையில் கோவிட்-19 மேலும் பரவுவதைக் குறைக்க அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையின் ஆதரவைத் தெரிவித்த அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ,இலங்கையின் தயார்நிலை மற்றும் கோவிட்-19 இற்கு எதிரான செயல்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளிக்க தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று நொப்கோ தலைவரிடம் கூறினார்.
ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தின் அவுஸ்திரேலிய அடையாளத்தை பாராட்டிய லெப்டினன்ட் ஜெனரல் சில்வா அவர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறைக்கு அவர்களின் சகோதர புரிதல் மற்றும் ஒற்றுமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். "இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் எங்கள் முப்படையினருக்கு இது ஒரு உண்மையான தேவை என்பதால் நாங்கள் உங்களுக்கு ஆதரவளித்ததற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த நேரத்தில் எந்தவொரு நாடும் இந்த வகையான உதவிக்கு 'வேண்டாம்' என்று சொல்லமாட்டார்கள், ஏனெனில் அனைவருக்கும் இதுபோன்ற பாதுகாப்பு தேவைப்படும் மற்றவர்களுக்கான பாதுகாப்பைப் பெறுவதற்கான மணிநேரம் "என்று தளபதி குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அன்செல் லங்காவின் பிரதிநிதிகளும் தளபதியின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.