அனைத்து பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர் ஒன்றித்தலைவரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.எஸ்.அஹ்மத் இன்று (16/04/2020) எஸ்.எல்.பி.சி முஸ்லீம் சேவை வானொலி நிகழ்ச்சியில் காலை 9.00 மணி முதல் 30 நிமிடங்கள் நேரடி நேர்காணலை வழங்கினார்.

இதன் போது, சகோதரர் அஹ்மத், அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் ஒரு பொறுப்பான அமைப்பாக மேற்கொள்ளப்பட்ட தற்போதைய சமூக திட்டங்களை எடுத்துரைத்தார், அதே நேரத்தில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினின் பின்னணி மற்றும் முக்கியத்துவத்தையும் அதன் நோக்கத்தையும் தெளிவாக விளக்கினார்.

விவாதிக்கப்பட்ட முக்கிய புள்ளிகள்,

 1. இந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இணையம் மூலமான கல்வியினை வழங்குதல்.

 2. தற்போதைய உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக தேசிய ஷூரா சபையுடன் இணைந்து நாடு முழுவதும் 1000 வீட்டுத் தோட்ட திட்டத்தை மேற்கொள்தல்.

 3. இலங்கை ஜாமியத்துல் உலமாவின் 138 கிளைகளுடன் இணைந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தன்னார்வ சேவையை வழங்குதல்.

4. எழுத்தில் திறமையான இளங்கலை பட்டதாரிகளை வெளியே கொண்டு வருவதற்காக பல்வேறு இலக்கியப் படைப்புகளை வெளியிடுதல்.

இது தவிர, இந்த தொற்றுநோய்களின் போது நாம் எவ்வாறு ஒரு பொறுப்புள்ள சமூகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் தெளிவாக விளக்கினார், இந்த காலகட்டத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்ற, அனைத்து துறைகளும் கோவிட் - 19 ஐ எதிர்த்து செயற்பட வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடினார்.

ஒலிப்பதிவு Link - https://www.facebook.com/2149537451962192/posts/2525307124385221/

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.