நீ நீயாக இரு!


ஆயிரம் பேர் ஆயிரம் கதைகள் சொல்வார்கள். ஏனெனில், எமது சமூகம் அவ்வாறு தான் பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு குறித்த நபர் செய்யும் நல்ல விடயங்களை பற்றி பேசி பாராட்டுவதை விட அவர் தெரிந்தோ ; தெரியாமலோ செய்கின்ற கெடுதியான விடயங்களையே அலசி ஆராய்கின்றார்கள்.பாராட்டுவதற்கு கஞ்சப்படுகிறார்கள்.இப்படிப்பட்ட, பாமர சமூகத்திலிருந்து நாம் சற்று வித்தியாசமாகத்தான் இருந்தால் என்ன? ஒரே கோணத்தில் யோசிக்காது வெவ்வேறுபட்ட கோணத்தில் யோசித்தால் தான் என்ன?

யார்?  எவர்?  எந்த எதிர்மறையான கருத்துக்களை சொன்னாலும் அதனை பொருட்படுத்தாது, அதை நினைத்து நினைத்து நாட்களை செலவிடாது, பயனுள்ள முறையில் எமது வாழ்நாளை செலவிட வேண்டுமாயின் அடுத்தவர்கள் கூறும் நேர்மறையான கருத்துக்களை/ நல்ல விடயங்களை கேட்டு நம்மை நாமே மென்மேலும் வளர உற்சாகப்படுத்திக் கொள்வதற்காய் அதனை உரமூட்டியாய் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இந்த பாரில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு விடயத்தில் தனித்துவமானவர்களே!
ஒவ்வொருவருக்கும் பல்வேறுபட்ட பல திறமைகள் காணப்படுகின்றன. அதனை நாம் தான் சரியாக கண்டு கொள்வதில்லை.

நீ முயற்சி செய்தால் நிச்சயமாக முடியும்.

'என்னால் முடியும்' என்ற வார்த்தையை வாழ்வில் எந்நேரத்திலும் மறக்காதே.

மாறுவோம் ... மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதது..

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்பது பழமொழி. எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாம் நாமாக வாழ்வதற்கு முயற்சிப்போம்.

  நீ நீயாக இரு!

 ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே!

🔖 Article by: ZAHBIYA NAZAR
திஹாரி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.