எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து பொது மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசேட பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் தினங்களில் நடத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
தனியார் நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்கப்படவேண்டும். பணியாற்ற வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து நிறுவன தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இதுதொடர்பான விடயங்கள் உரிய சட்ட கட்டமைப்புக்குள் இடம்பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேல் மாகாணத்தின் பங்களிப்பின்றி பொருளாதாரத்தை மேம்படுத் முடியாது இதற்காக மேல் மாகாணம் திறக்கப்பட வேண்டும்.  தற்போதைய ஊரடங்கு அமுல் நடத்தப்பட்டபோதிலும் மேல் மாகாணத்தில் பணிகளை ஆரம்பிகக வேண்டும். என்றார்.
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை.மேற்கொள்ளப்படும்.  சட்டங்களுக்கு அமைய செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.