கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இலங்கைக்கு வரமுடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த 156 இலங்கை மாணவர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் (06) மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.

ஸ்ரீ லங்கன்   விமான சேவைக்கு சொந்தமான யு எல் 303 என்ற விசேட விமானம் இன்று மாலை 4.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தது.

இவ்வாறு வருகை தந்த மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.