மேல்மாகாணத்தில் கொரோனா (கொவிட் 19) நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
தற்பொழுது மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது வரையில் பல்வேறு நோய் அனர்த்த குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இருப்பினும் நிலைமை மேலும் 100 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்க முடியாது. இந்த கட்டுப்பாடு எமது கையிலிருந்து நழுவிச் செல்லவில்லை என்பதுடன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும். 
எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரையில், திங்கட்கிழமையளவில் நாட்டு நிலைமையை வழமையான நிலமைக்கு கொண்டு வரமுடிகின்றமை அல்லது இல்லாமை தொடர்பில் எதிர்வுகூற முடியாது. இருப்பினும் வெசாக் காலப்பகுதி வரை இந்த கடுங்கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் மேலும் சில காலம் செல்லும் வரையில் சுகாதரர ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக நாளாந்த கடமைகளை மேற்கொள்வது கட்டாயமாகும்.
நேற்றைய (30.04.2020) தினத்தில் 1397 Pஊசு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகளுக்கு அமைவாக நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றமை சிறிய எண்ணிக்கையிலாகும். இருப்பினும் Pஊசு பரிசோதனை நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பொதுவான எண்ணிக்கை 1500 ஆக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் குழுக்கள் எவை என்பது எதிர்நோக்கும் நிலைமைக்கு அமைய தீர்மானிக்கப்படும். தேவையேற்படுமாயின் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீசுPஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை 3000 வரையில் அதிகரிப்பதற்கு தற்பொழுது ஆற்றல் உண்டு. பல்கலைக்கழக கட்டமைப்பு இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கைகளை இவ்வாறு அதிகரிப்பதற்கு ஆற்றல் கிட்டியுள்ளது. சீனாவினால் நன்கொடை என்ற ரீதியில் கிடைக்கப்பெற்ற உபகரண தொகுதிகளைப் போன்று, பயன்படுத்தப்படும் எத்தகைய பீசுPஆர் பரிசோதனை உபகரணங்களாக இருந்த போதிலும் அவற்றின் துல்லியமா செயற்பாடுகள் தொடர்பாக அடிக்கடி பரிசோதனை (எயடனைவைல) மேற்கொள்ளப்படும். இதனால் பரிசோதனைகளின் பெறுபேறுகள் தொடர்பில் தாம் திருப்திக் கொள்வதாகவும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இருப்பினும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தாக்கத்திற்கான முக்கிய சாதகமாவது பொதுமக்களினால் தொடர்ந்தும் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதே ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.