பருப்பு மற்றும் தகரத்தில் அடைத்த ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஒரு கிலோ கிராம் பருப்புக்கான விலை ரூ. 65 எனவும், 425 கிராம் தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் விலை ரூ. 100 எனவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.
மார்ச் 18 முதல் நடைமுறையில் வருவதாக அறிவிக்கப்பட்ட குறித்த அறிவிப்பு தற்போது நீக்கப்படுவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.






(தினகரன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.