பத்தொன்பதாவது தொடர்.......................

ஈராக்கை வேட்டையாட அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுச்சதியும், அடுத்தகட்ட நகர்வுக்கான நியாயப்படுத்தலும்


அமெரிக்காவினதும், யூதர்களினதும் நீண்டகால முயற்சியின் பலனாக அமெரிக்க படைகள் வளைகுடா நாடுகளில் தளம் அமைத்துக்கொண்டனர். அன்றைய அமெரிக்காவின் ஈராக்கிற்கான தூதுவருடன் சதாம் ஹுசைன் நடாத்திய பேச்சுவார்த்தைக்கு அமைவாக அமெரிக்காவின் சம்மதத்துடனேயே குவைத் ஆக்கிரமிக்கப்பட்டது.

“ஈராக்கின் இராணுவ பலம் எங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்துவந்தது. இந்த வெற்றியானது இஸ்ரேலுக்கான வெற்றியாகும். இப்படியானதொரு திட்டம் தோல்வி அடைந்திருந்தால், நாங்களே நேரடியாக ஈராக்கின் இராணுவ கட்டமைப்புக்களை அழித்திருப்போம். அதனால் எங்களுக்கு பாரிய இழப்புக்களும் ஏற்பட்டிருக்கும்”. என்று யுத்தம் முடிவடைந்தபின்பு அன்றைய இஸ்ரேலிய பிரதமர் கூறியிருந்தார்.

இதன் மூலம் முஸ்லிம்களையும், அவர்களது பலத்தையும் அழிப்பதற்காக யூதர்களும், அமெரிக்கர்களும் எவ்வாறெல்லாம் தந்திரோபாயங்களை பாவிக்கின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

குவைத்தை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கையில், குவைத்தை மீட்பதைவிட, உலகின் நான்காவது சக்திவாய்ந்த ஈராக் இராணுவத்தை அழிப்பதுதான் எங்களது இலக்காக இருக்க வேண்டும் என்பது அமெரிக்க படைகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவாகும்.

இந்த போரில் அமெரிக்கர்களும், யூதர்களும் நினைத்ததுபோல் ஈராக்கிய பலம்வாய்ந்த இராணுவக் கட்டமைப்பு சிதைவடைந்தது. குவைத்திலிருந்து பின்வாங்கிச்சென்ற இராணுவத்தையும், சதாம் ஹுசைனின் விசுவாசமான குடியரசுப் படைகளையும் தேடிச்சென்று அழிப்பதில் அமெரிக்க விமானப்படை குறியாக இருந்தது.

இந்த யுத்தத்தில் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய குறுகிய பரப்பைக்கொண்ட ஜப்பானிய நகரங்களில் அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டுகளின் சேதத்தைவிட, ஆறு மடங்கு அதிகமான சேதத்தை ஈராக்கின் பரந்த நிலப்பரப்பில் ஏற்படுத்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

வேண்டுமென்று மக்களின் குடியிருப்புக்களை இலக்குவைத்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடாத்தியிருந்தது. இதில் 150.000 அப்பாவி முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ரில்லியன் கணக்கான சொத்துக்கள் முற்றாக அழிக்கப்பட்டது.

குவைத்தை மீட்பது என்ற போர்வையில் அமெரிக்கா நடாத்திய கொலை வெறியாட்டத்தை கண்டித்து சவூதி அரேபியாவில் உள்ள பிரபலமான இமாம்கள் கண்டனம் வெளியிட்டமைக்காக சவூதி அரசாங்கம் குறித்த இமாம்களை கைது செய்து சிறையிலடைத்தது.

இதன்மூலம் சவூதி அரசு அமெரிக்காவின் கொலை வெறியாட்டத்தை ஆதரிக்கிறது என்று அப்போது சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

போரில் தோல்வியுற்று குவைத்திலிருந்து ஈராக்கிய படைகள் வெளியேறினார்கள். அதன் பின்பு மத்திய கிழக்கில் அமைதி நிலவியது. ஈராக் மீது விதிக்கப்பட்ட மிகவும் இறுக்கமான பொருளாதார தடையினால் ஈராக்கிய மக்கள் அதிகமாக பாதிப்பட்டதுடன், ஈராக்கிய இராணுவத்தை மீண்டும் பலமானமுறையில் கட்டியமைக்க முடியவில்லை. உள்நாட்டிலும் விமானம் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தங்களது காரிய,ம் முடிவடைந்தபின்பு ஏன் அங்கு தொடர்ந்து அமெரிக்க படைகள் நிலைகொண்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் 1992 இல் கட்டுரைகளாக ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியது.

இந்த நிலையில் சதாம் ஹுசைனுக்கும், ஈராக்கிய மக்களுக்கும் எதிராக மீண்டுமொரு சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க இயந்திரம் திட்டமிட்டது. இதில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் டவிள்யு புஷ்சின் சுயநலமும் இருந்தது.

அமெரிக்க ஜனாதிபதிகள் தங்களது இரண்டாவது பருவகாலத்துக்கான தேர்தலை எதிர்கொல்வதென்றால் ஏதாவதொரு முஸ்லிம் நாட்டின்மீது குண்டு போடுவார்கள். அல்லது படைகளை அனுப்பி அமெரிக்க மக்களை சூடாக்கியதன் பின்பே தேர்தலை எதிர்கொள்வது வழமை.

அதுபோல் இஸ்ரேலும் பாலஸ்தீன பகுதியில் தாக்குதலை நடாத்தி பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்று அல்லது சிறை பிடித்த பின்பே தேர்தலுக்கு செல்வார்கள்.

இவ்வாறு முஸ்லிம் மக்களை கொலை செய்வதன் மூலமே தங்களது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பது அமெரிக்க, இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கணிப்பாகும்.

அந்தவகையில் தனது இரண்டாவது பருவகாலத்துக்காக ஜனாதிபதி தேர்தலை ஜோர் டவிள்யு புஷ் எதிர்கொள்ள இருந்த வேளையில் அமெரிக்க மக்களை சூடாக்குவதற்காக சதாம் ஹுசைனை துரும்பாக பாவித்தார்.

ஈராக்கில் பேரழிவு தருகின்ற ரசாயன ஆயுதங்கள் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதனை சதாம் மறுத்தார் ஆனாலும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவினர் ஈராக்குக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். இறுதியில் ஜனாதிபதி மாளிகைக்குள் சோதனையிட சென்றபோதுதான் பிரச்சினை உருவானது.

எப்படியும் ஈராக்கை ஆக்கிரமித்து அதன் பெறுமதியான எண்ணை வயல்களை சூறையாடுவதற்கும், மத்தியகிழக்கில் பதட்டமான சூழ்நிலைகளை வைத்துக்கொண்டிருப்பதன் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து நிலைகொள்வதற்கான அவசியத்தை உருவாக்கும் நோக்கிலும், மற்றும் இதனை தனது தேர்தல் வெற்றிக்காகவும் பாவிக்க திட்டமிட்டவர்கள் எப்படியும் அதற்கான காரணத்தை உருவாக்காமல் இருக்கமாட்டார்கள்.

அதனாலேயே சதாமிடம் இருக்கின்ற பேரழிவுகளை தரக்கூடிய இரசாயன ஆயுதங்களை கண்டுபிடித்து அழித்தல் என்று சோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்து ஈராக்குக்கு எதிராக இரண்டாவது வளைகுடா போர் ஆரம்பிக்கப்பட்டது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

தொடரும்...........................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.