2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நாளை (19)காலை 10 மணி வரை ஒத்திவைத்துள்ளது.
2020 பாராளுமன்றத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதிநடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ; அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.