மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியிருந்தாலும் அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மக்கள் எந்தளவு அறிவுடையவர்களாக இருப்பினும் நேற்றைய நாளில் (11) அவர்கள் செயற்பட்ட விதம் திருப்தி அடையும் வகையில் இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

சமூக இடைவெளியை பேணுவதில் மக்கள் நேற்றைய தினத்தில் முழுமையான அக்கறை காட்டவில்லை எனவும் வாகன போக்குவரத்தின் போதும் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினத்தில் மேற்குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.