கேட்ட உடனே ஈர்த்துவிடும் காந்தக் குரல் எல்லோருக்கும் வாய்த்திடுவதில்லை.
அப்படியாக தன் குரலால் ஈர்த்திடும் மந்திரம் வாய்க்கப் பெற்றவர்தான் நாகூர் ஈ.எம்.ஹனீபா.

அந்தக் குரல ஓதப்பள்ளி போற நேரம்தான் பெஸ்ட்டா கேட்ட நெனவு, ஓதப்பள்ளில நடக்குற மீலாத் விழா நடக்குற அன்டக்கி அஸரோட இஸ்லாமிய கீதம் போடத் தொடங்குவாங்க அதுல முக்காவாசி நாகூர் ஹனீபாட பாட்டுத்தான் கேட்கும்..

வாப்பாக்கிட்டதான் இவர பத்தி விசாரிச்சி,கெசட் பீஸ்ல இருந்த ஆள்ள போட்டாவயும் பாத்தன்.
இன்னம் நெனப்பிருக்கு அந்த கெசட் பீஸ்ல பச்சத் தொப்பியோட சிரிச்சிட்டு இருந்தாரு.
கெசட் பீ்ஸ்ட அடுத்த பக்கம் அதுல இருக்குற இஸ்லாமிய கீதத்துட லிஸ்ட் இருந்துச்சி..

இப்டியே போய் ரோட்டால போற கடல வண்டில்ல அடிக்கடி நாகூர் ஹனிபாட பாட்டுப் போகும்..அவர்ர குரலக் கேக்குறத்துக்கே நாலஞ்சி நாள் கடல  வண்டிலுக்கு பின்னாலயும் போயிருக்கன்..

நான் பெஸ்ட்டா நோம்பு புடிச்சத்துக்கும் நாகூர் ஹனிபாட பாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு "ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப்பாலகன்....." கீதமும் அதுல வாற பாலகன் என்ன போலதான் இருப்பான் என்டும்  உம்மாட்டயும் அடிக்கடி சொல்லிட்டே இருப்பன்.
முந்தி சாச்சிட ஊட்ட கெசட் பீஸ் நெறய இருக்கும் அதுல நாகூர் ஹனிபாட நெறய பாட்ட கேட்டிருக்கன்..
எனக்கென்டா அவர்ர பாட்ட கேட்டா ஒரு வித்தியாசமான உணர்வு வரும் அந்த உணர்வு புதுத் தெம்ப தார  மாதிரி இருக்கும்.
இந்த மனிசன்ட குரல்ல இருக்குற மந்திரம் எந்தளவுக்கு என்டா ஒரு சரித்திரத்த பாட்டா படிச்சாரென்டா அந்தக் கத கண்ணுக்கயே வந்து போகும். அப்டி ஒரு குரல்வளம் அல்ஹம்துலில்லாஹ்.

நாகூர் ஹனீபாட பாட்டுல பிடிச்ச பாட்டு நெறய இருக்கு அடிக்கடி கேக்குற பாட்டு என்டும்  கணக்க பாட்டும் இருக்கு. ஆனாலும் "மஹ்மூது நபிகள் பிரானே...." பாட்டு எனக்கு கடுமயா பிடிச்ச பாட்டு.
ஸ்கூல் டைம்ல சைபுள்ளா நாநா அடிக்கடி மேடைல பாடுவாரு...அவருக்கு கொஞ்சம் நாகூர் ஹனீபாட சாயல்ல பாடுவாரு அதால அவர் பாடுறதும் பிடிக்கும். அதுக்கு பிறகு எங்கட வகுப்புல படிச்ச ஹபீபா ரெண்டு மூனு தரம் ஸ்கூல்ல நடந்த நிகழ்ச்சிகள்ள இந்த பாட்ட படிச்ச நெனப்பும் இருக்கு..
ஆனாலும் நாகூர் ஹனீபாட குரல்ல இருக்குற ஒரு ஈர்ப்பு தனி வகையான ஈர்ப்பு.

மனசு ஒருமாதிரி அங்க இங்க அலை மோதுற நேரம் "இறைவனிடம் கையேந்துங்கள்,அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...." பாட்ட கேட்டா  மனசுக்கு ஒரு வகையான அமைதியயும் உணர்ந்திருக்கன். அல்ஹம்துலில்லாஹ் அப்டி ஒரு குரல் அவருக்கு.
அதே போல "ஏழையாக வாழ்ந்த்தேனோ யாரஸூலுல்லாஹ்...." பாட்ட எத்தன தரம் கேட்டிருப்பன் என்டு எனக்கே தெரியா அவ்ளோ அழகா ஆழமா நபிட பண்ப தன்ட குரலால மனசுல பதிய வைப்பாரு மனிசன்..

இதுக்கு முந்தின நோம்பு காலத்த போல இந்த முற வீடுகள்ளயோ கடைகள்ளயோ இஸ்லாமிய கீதம் பெரிசா கேக்கல, முஸ்லிம் சேவைல மட்டும் இடக்கிட கேட்டன்.
நோம்பும் நாகூர் ஹனீபாட குரலுக்கும் நெருங்கின தொடர்பு இருக்கு எங்குறதயும் இந்த முற நோம்புல நல்லாவே வெளங்கிச்சு.
நோம்போட தேத்தணி கடய தாண்டுற நேரம் "அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே..." என்று இழுத்தெடுக்குற அந்தக் குரல கேக்குது செல்லி முடிக்க ஏலாத சுகம்..

அல்ஹம்துலில்லாஹ் கேட்ட உடனே ஈர்த்தெடுக்குற குரல நாகூர் ஹனீபாக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கான்தானே..
இந்த போஸ்ட்ட டைப் பண்ணுற நேரமும் "இறைவா உன்னைத் தேடுகிறேன்...." பாட்டக் கேட்டுட்டுத்தான் இருக்கன் அப்டி ஒரு இனிம அந்தக் குரல்ல..

நாகூர் ஹனீபா காந்தக் குரல் வாய்க்கப்பெற்ற மாபெரும் கலைஞன்
அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொளவானாக...

ஆசிரியர் நிஸ்ரி
அட்டாளைச்சேனை 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.