🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஈடில்லா அறிவையும்
இணையில்லா அதபையும்
ஈருலக வேந்தரின் மீது
அளவில்லா அன்பையும் தந்த
என் அன்புத் தாயே!

பண்ணிரண்டு ஆண்டுகளும்
எம் கண்ணிரண்டில் மின்னியதே!
எமைக் கடந்த காலமதை
மீளவும் எண்ணியதே!

நீ நானிலம் நிலைக்கனும்
நலமாய் ஜொலிக்கனும்
மங்கையர் நன்நெறி பெற்றிடவே!

உன் உயர்வுக்கு வித்திட்ட
உன்னத உறவாக எம்
உணர்வுடன் கலந்திட்ட உத்தமரே!
 *உஸ்மான்* *ஸஹீல்* *காரி* அவர்களே!

உம்மால் உயர்ந்த நாம்
உம் உயர் அந்தஸ்துக்காய்
உயர்த்திடுவோம் எம் கரங்களையே!

உம் வதனம் நோக்குகையில்
என் இதயம் வரைந்தவற்றை
வடித்திட்டேன் இவ் வரிகளிலே!

இவள்
முஅஸ்கர் 🌹
ஈன்ற பிள்ளை
Fathima Azary
Aalima Muaskariyya.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.