பிறந்த சிசுவை மலசலகூட குழிக்குள் போட்ட தாய் கைது!

Rihmy Hakeem
By -
0

என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்
புத்தூர் கிழக்கு, விக்னேஸ்வரா வீதியில், இன்று (20) பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயை, அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் அவர் போட்டுள்ளார்.
நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயைக் கைது செய்தனர்.
சந்தேக நபரான பெண்ணின் கணவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)