இது, ஒரு பெரும்பான்மையின சகோதரரின் முகநூல் பக்கத்தில் பதியப்பட்டிருந்த ஒரு வேண்டுகோள். 

கேட்குமா நமது சமூகம்? 

தமிழ் மொழிபெயர்ப்பு: ஓகொடபொல றினூஸா அப்துல்பாரி 


முஸ்லிம் சமூகமே! சிந்தித்து செயற்படுங்கள், கவனமாக இருங்கள்.

உங்களுடனுள்ள அன்பினாலேயே இதனைக் கூறுகின்றேன்.

சிங்கள-தமிழ் புத்தாண்டு வந்தது. ஊரடங்கு அமுலில் இருந்தது. எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர்.

வெசாக் வந்தது. ஊரடங்கு அமுலில் இருந்தது. அப்போதும் எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர். எந்தப் பிரச்சினையும் இல்லை.

கொரோனா அதிகரித்துக்கொண்டு இருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை.

ஆனாலும் மே மாத நடுப்பகுதியளவில் ஊரடங்கைத் தளர்த்துவார்கள்.

முஸ்லிம்கள் சேர்ந்து இருப்பதற்கும்.... சேர்ந்து சாப்பிடுவதற்கும் விரும்புகின்ற ஒரு சமூகம்.

நோன்புப் பெருநாள் என்பதால் எல்லோரும் பொருட்களைக் கொள்வனவு செய்ய வெளியே செல்வார்கள்.

அதனை குறிப்பிட்ட சிலர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வர்.

கொரோனா அதிகரித்தது முஸ்லிம் மக்களால்தான் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும். முஸ்லிம் மக்களை பழிசொல்வதற்கு முயற்சிப்பர்.

அதனால், அன்பானவர்களே! எமக்கு பெருநாள் உணவு தராவிட்டாலும் பரவாயில்லை - நீங்கள் கவனமாக இருந்துகொள்ளுங்கள்.

கடை வீதிகளுக்குச் செல்லாதீர்கள். இப்போது கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் சந்தேகத்தின்பேரில் சடலங்களை தகனம் செய்கின்ற காலம்.

அதனால் ஊரடங்கு அமுலில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அரசாங்கத்தினதும் சுகாதாரத் துறையினரதும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு, பெருநாள் கொண்டாட்டங்கள் முடியும் வரையாவது வீடுகளிலேயே இருங்கள்.

இந்த செய்தியை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். அதனால் முழு நாடும் கொரோனாவிலிருந்து விடுபட முடியும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.