மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானது (விபரம்)


இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று (01) மாலை 6.00 மணி வரை 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 05 பேர் கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிய வருகிறது. மற்றுமொருவர் கொழும்பை சேர்ந்தவர் என்பதுடன் ஏனைய மூவரும் கடற்படையை சேர்ந்தவர்களாவர்.


கருத்துகள்