கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும்
புத்தளம் மாவட்டங்களில் மே 11 ஆம் திகதி
முதல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும்
மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்கு
கொண்டு வருவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி
ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும்
புத்தளம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய
மாவட்டங்களில் மே மாதம் 6 ஆம் திகதி
வரையில் முன்பு போன்று இரவு 8 மணிக்கு
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு
மீண்டும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
குறித்த மாவட்டங்களில் மே மாதம் 6 ஆம்
திகதி இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு
சட்டம் மே மாதம் 11 ஆம் திகதி காலை 5 மணி
வரையில் தொடர்ந்து நீடிக்கும் என ஜனாதிபதி
ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக