பாணந்துறை எலுவிலை என்ற இடத்தில் நேற்று முன்தினம் (06) இரவு ஏற்பட்ட கலவரத்தில் ஆறு பேர் வெட்டு காயங்களுக்குள்ளாகி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரு தரப்பனருக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு கலவரத்தில் முடிந்ததாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். பலத்த காயங்களுக்குள்ளான இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் ஒருவர் (களுபோவிலை) கொழும்பு தெற்கு பெரியாஸ்பத்திரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒரு பெண்ணுடன் ஒருவர் கொண்டிருந்த கள்ளத் தொடர்பே இத்தகராறுக்கு மூல காரணம் என பாணந்துறை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சே இரசிங்க தெரிவித்தார்.

இக்கள்ளத் தொடர்பு சம்பந்தமாக ஏற்பட்ட வாய்த்தகராறே அடுத்த நாள் இத்தாக்குதலை நடாத்த காரணம் என விசாரணைகள் மூலம் அறிய முடிந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய தலைமையகம் பொறுப்பதிகாரி சிரேஷ்ட இன்ஸ்பெக்டர் குமாரசேன தெரிவித்தார்.

இத்தாக்குதல் தொடர்பாக மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பாணந்துறை தெற்கு பொலிசார் ஏனைய சந்தேநபர்களைத்தேடி வலை விரித்துள்ளனர்.

மொறட்டுவை நிருபர் - எம்.கே.எம். அஸ்வர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.